ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறைகள் – முழு விபரங்கள் இதோ!!

0

ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்..!

ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், இயங்காது என்று பார்க்கலாம் வாருங்கள். பொதுத் துறை, தனியார், கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் எப்போதும்போல அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறைதான். அந்த வகையில், ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய ஐந்து நாட்களும் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது.

ஆகஸ்ட் 3ம் தேதி ரக்ஷா பந்தன் காரணமாக அகமதாபாத், டேராடூன், ஜெய்ப்பூர், கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் வங்கிகள் இயங்காது. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, புவனேஷ்வர், ஹைதராபாத் மற்றும் பாட்னாவில் உள்ள வங்கிகளுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆகஸ்ட் 13ம் தேதி தேசபக்தர் தினத்தையொட்டி இம்பாலில் வங்கிகள் மூடப்படும்.ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் திதிக்கு கவுஹாத்தியில் வங்கிகளுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி விடுமுறை. ஆகஸ்ட் 21ம் தேதி உழவர்களுக்கான தீஜ் பண்டிகையை முன்னிட்டு காங்டோக்கில் வங்கிகள் இயங்காது. ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் அகமதாபாத், பெலாப்பூர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!!

ஜம்மு, ராஞ்சி மற்றும் ஸ்ரீநகரில் உள்ள வங்கிகள் கர்மா பூஜை / அசுரா பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 29ம் தேதி இயங்காது. ஆகஸ்ட் 31ம் தேதி திருவோணம் / ஜத்ரா பண்டிகைகளை முன்னிட்டு கொச்சி, திருவனந்தபுரம், காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here