வங்கி வாடிக்கையாளர்களே கவனம்., பிப்ரவரி மாத விடுமுறை தினங்கள் வெளியீடு! உடனே பாருங்க!!

0
வங்கி வாடிக்கையாளர்களே கவனம்.,பிப்ரவரி மாத விடுமுறை தினங்கள் வெளியீடு! உடனே பாருங்க!!
வங்கி வாடிக்கையாளர்களே கவனம்.,பிப்ரவரி மாத விடுமுறை தினங்கள் வெளியீடு! உடனே பாருங்க!!

வாடிக்கையாளர்களே வரும் பிப்ரவரி மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு, விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விடுமுறை தினங்கள்:

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி சேவைகளை அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வார இறுதி மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இதை பயனர்கள் தெரிந்து கொள்வதால், அவர்களின் நேர இழப்பு தவிர்க்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் பிப்ரவரி 5, 11, 12, 19, 25, 26 ஆகிய இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல், பிப்ரவரி 18ம் தேதி மகா சிவராத்திரி அன்று ஒரு சில மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கைதி படத்தின் ரீமேக்.., ஹிந்தியில் தெறிக்கவிட்ட பர்ஸ்ட் லுக்.., படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

இதை தொடர்ந்து, பிப்ரவரி 20ஆம் தேதி அருணாச்சல் மற்றும் மிசோரம் வங்கிகளுக்கும், பிப்ரவரி 21 ல் சிக்கிம் மாநில வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதை வாடிக்கையாளர்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here