தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – TNPEF அறிவிப்பு!!

0

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் வேலைக்குச் செல்லும் வங்கி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசு மற்றும் வங்கி நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்க ஆகஸ்ட் 20 ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தமிழக வங்கி ஊழியர் சம்மேளனம் (டி.என்.பி.இ.எஃப்) அழைப்பு விடுத்துள்ளது.

வேலை நிறுத்தம்:

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் (எஸ்.எல்.பி.சி) சமீபத்திய கூட்டத்தின் முடிவில் டி.என்.பி.இ.எஃப் பொதுச் செயலாளர் இ.அருணாசலம் கூறியதாவது: “அனைத்து வங்கி கிளைகளும் வழக்கம் போல் செயல்பட வேண்டும், முழு அளவிலான சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் வேண்டும் என்றும் எஸ்.எல்.பி.சி வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இது பெரும்பான்மையான ஊழியர்களுக்கு, குறிப்பாக பொதுப் போக்குவரத்து (பஸ், ரயில்) முறையைச் சார்ந்து தங்கள் பணியிடங்களுக்கு (கிளை) பயணிக்க மிகவும் கடினமாக உள்ளது. ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், பஸ் மற்றும் உள்ளூர் ரயில் சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஊழியர்களை கிளைக்குச் செல்ல ஏதுவாக சில போக்குவரத்து முறைகளை ஏற்பாடு செய்ய வங்கி நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் கூட, வங்கி ஒரு அத்தியாவசிய சேவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய வாரங்களில், பல்வேறு வங்கிகளின் கிளைகளில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் சிலர் தங்கள் உயிரையும் இழந்துவிட்டனர். எனவே பயம், மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் போன்ற உணர்வு உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கர்ப்பிணி பெண் ஊழியர்கள் கூட அலுவலகத்திற்கு வருவதற்கு விலக்கு இல்லை.

ஜம்மு & காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முதலாம் ஆண்டு – 2 நாட்கள் ஊரடங்கு அமல்!!

போக்குவரத்து முறை மீட்கப்படும் வரை 50 சதவீத ஊழியர்களின் வருகையுடன் ஒரு பட்டியல் முறையைத் தொடர வேண்டும் என்று சங்கம் கோரியுள்ளது. “நிர்வாகங்கள் வணிக தொடர்ச்சியான திட்டத்தை உறுதிசெய்து வங்கி நேரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், வங்கி என்பது ஒரு அத்தியாவசிய சேவையாக இருப்பதால், சமீபத்திய வாரங்களில் பல ஊழியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால், வங்கி ஊழியர்களுக்கு சோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) கிளைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வதற்கு வசதியாக ஐந்து நாள் வார விதிமுறை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here