வங்கிகளில் வைப்புத் தொகைக்கான காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு – மத்திய அமைச்சவரவை ஒப்புதல்!!

0
The Minister of State for Commerce & Industry (Independent Charge), Smt. Nirmala Sitharaman addressing a press conference, in New Delhi on October 14, 2016.
வங்கிகளின் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்டத்தில் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வங்கி திவாலானால், வாடிக்கையாளரின் டெபாசிட் பணத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

அதாவது காப்பீடு தொகை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டதால் இந்தியாவின் 93.5 விழுக்காடு வைப்பு நிதி கணக்குகள் மற்றும் 50.9 சதவீத வைப்பு நிதி மதிப்பு இதற்குள் அடங்கிவிடும் என்றும், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்படி வங்கி திவாலாகும் போது 90 நாட்களில் இந்த வைப்பு தொகை டெபாசிட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடுத் தொகை கிடைக்கும் என்று குறிப்பிட்டு உள்ளார். இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கி கிளைகளுக்கும் இது பொருந்தும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here