வங்கிக்கணக்கிகில் தவறுதலாக ஏறிய 5.5 லட்சத்தை செலவு செய்த நபர் – பிரதமர் செலுத்திய தொகை என நினைத்ததாக வாக்குமூலம்!!

0

தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக வந்த 5.5 லட்சம் பணத்தை திருப்பி தர முடியாது எனவும், அது பிரதமர் ஒவ்வொருவர் கணக்கிலும் நினைத்ததாக செலுத்திய தொகை எனவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

முக்கிய வாக்குமூலம்:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பொதுமக்களிடம் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து இருந்தார்.  அதில் குறிப்பிடத் தகுந்த வகையில், கருப்பு பணம் ஒழிப்பு மற்றும் பொதுமக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் பணம் செலுத்தப்படும் எனவும் அறிவித்தார்.

 

இந்த பணம் அனைத்தும் கருப்பு பணமுதலைகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து, இந்த பணம் எப்போது தங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், தற்போது வரை இந்த பணம் செலுத்தப்படவில்லை.

இதனால், நெட்டிசன்கள் அனைவரும் எப்போது எங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் வரும் பிரதமரே என்று சமூகவலைத்தளத்தில் கிண்டலாக பதிவிட்டு  வந்தனர். இருந்தாலும் இது குறித்து எந்த தகவலும் வெளியே வராமல் இருந்தது.   இந்த நிலையில், இந்த பணம் குறித்த வினோத தகவல் ஒன்று பரவி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது.  அதாவது, பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு நபர் தன்னுடைய வங்கிக்கணக்கிற்கு தவறுதலாக வந்த 5.5 லட்சம் பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார்.

இது குறித்து, காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இந்த பணம் பிரதமர் மோடி பொதுமக்கள்  கணக்கில் செலுத்துவதாக சொன்ன 15 லட்சம் பணத்தின் முதல் தவணை என்றும், அதை தாம் செலவு செய்து விட்டதாகவும், இதனை திருப்பி தர முடியாது எனவும்  வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here