
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உலகளாவிய அடையாளத்தை வழங்குவதற்காக அரசானது தனித்துவமான 12 எண்களை உள்ளடக்கிய ஆதார் கார்டு வழங்கியது. இந்த ஆதார் கார்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. அவ்வாறு இணைத்தால் மட்டுமே, அரசு அறிவிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை மக்கள் முழுவதுமாக பெற இயலும் என குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இத்தகைய அறிவிப்புகள் வெளியாகி பல மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், இன்னும் பலர் ஆதார் எண்ணை அரசின் முக்கிய ஆவணங்கள் உடன் இணைக்காமல் உள்ளனர். இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் இதற்கு காலகெடுவை அறிவித்துள்ளது. அதாவது, “ஆதார் எண்ணை மக்கள் அனைவரும் தங்களது வங்கி மற்றும் தபால் சேமிப்பு கணக்குகளுடன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைந்திருக்க வேண்டும். இல்லையேல் வங்கி கணக்குகள் முடக்கப்படும்” என மத்திய நிதி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு…, ஆட்சியர் வெளியிட்ட அதிரடி நடவடிக்கை!!