T20 உலக கோப்பை 2022.., வங்கதேச அணி அறிவிப்பு.., முக்கிய வீரர் நீக்கம்!!

0

ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ICC T20 உலக கோப்பை தொடருக்கான வங்கதேச அணி விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வங்கதேச அணி விவரம்

T20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைகான அணி விபரங்களை பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் முன்னதாகவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று வங்கதேச அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலக கோப்பை தொடருக்கான வங்கதேச அணியை சாகிப் அல் ஹசன் வழி நடத்த உள்ளார். மேலும் அணியில் நட்சத்திர வீரர்களான லிட்டன் தாஸ், யாசிர் அலி, நுருல் ஹசன், ஹசன் மஹ்முத், நஜ்முல் ஹுசைன் சாண்டோ போன்றோர் இடம் பிடித்துள்ளனர். ஆனால் ஆசிய கோப்பை தொடரில் பலமுறை விளையாடிய முன்னணி வீரரான மஹ்முதுல்லா இடம்பெறாதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் வங்கதேச அணி திறமையான வீரர்களை தேர்வு செய்து பலமான அணியை அறிவித்துள்ளது.

வங்கதேச அணி :

ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), சபிர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஸ், அஃபிஃப் ஹுசைன், மொசாடெக் ஹுசைன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, நுருல் ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான், முகமது சைஃபுதீன், டஸ்கின் அஹமது, எபடாட் ஹுசைன், ஹசன் மஹ்முத், நசீம் அஹமது, நஜ்முல் ஹுசைன் சாண்டோ.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

T20 உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைகான அணி விபரங்களை தடருக்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here