ஆசிய கோப்பை 2022 – தோல்வியால் எடுத்த விபரீத முடிவு…, வங்கதேச அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு!

0
ஆசிய கோப்பை 2022 - தோல்வியால் எடுத்த விபரீத முடிவு..., வங்கதேச அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு!
ஆசிய கோப்பை 2022 - தோல்வியால் எடுத்த விபரீத முடிவு..., வங்கதேச அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு!

வங்கதேச அணியின் விக்கெட் கீப்பரான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் மற்ற போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வங்காளதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு!

வங்கதேச அணியில் சிறந்த நட்சத்திர ஆட்டக்காரராக விளையாடி வரும் நிலையில் அவர்களில் முன்னணி விக்கெட் கீப்பரான முஷ்பிகுர் ரஹீம் வங்கதேச அணிக்கு பல வெற்றிகளை குவித்துள்ளார். மேலும் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இவர் வங்கதேச அணிக்காக 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5235 ரன்களும், 236 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6774 ரன்களும், 102 T20 போட்டிகளில் விளையாடி 150 ரன்கள் விளாசி பல முறை அணிக்கு வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற போட்டிகளான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதாகவும் தெரிவித்துள்ளார். முஷ்பிகுர் ரஹீம் T20 போட்டிகளில் 2006 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் முதல் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு உலகக்கோப்பை தொடரில் 2007 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக களமிறங்கி விளையாட ஆரம்பித்தார்.

இந்நிலையில் இவர் இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இடம் பெறாமல் இருப்பது வங்கதேச அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவர் உள்ளூர் தொடர்களான ஐபிஎல் போன்றே வெளிநாடுகளில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார். தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறிதைத் தொடர்ந்து இவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here