
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெங்களூரு நகரில் கே.ஆர்.புரம் முதல் ஒயிட்ஃபீல்டு வரையிலும், கெங்கேரி முதல் பையப்பனஹள்ளி வரையிலும் பர்பிள் லைன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது, அடுத்தகட்டமாக பொம்ம சந்திரா முதல் ராஷ்டிரிய வித்யாலயா வரை மஞ்சள் லைன் மெட்ரோ கட்டமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை மற்றும் ராஷ்டிரிய வித்யாலயா முதல் பொம்ம சந்திரா வரையிலான பர்பிள், எல்லோ லைன் வழித்தடத்தை சேர்ந்த பயணிகளிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில் 95 சதவீதம் பேர் தங்களின் டூ வீலர், காரை விட்டு விட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு வருவதால் Y.R.R., ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.