டிக்டாக்கை தடை செய்யுங்கள் #BanTikTok – ட்ரெண்ட் செய்ய இதுதான் காரணம்..!

0

இந்தியாவில் டிக்டாக்கை தடை செய்ய கூறி #BanTikTok இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு ஒரு இளைஞர் வெளியிட்ட டிக்டாக் வீடியோ தான் காரணம். அதற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

டிக்டாக் மோகம்:

இந்தியர்கள் 2019ம் ஆண்டு மட்டும் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் மூழ்கிக் கிடந்துள்ளார். இதிலிருந்து நாம் டிக்டாக்கிற்கு எந்த அளவிற்கு அடிமையாகி உள்ளோம் என்பது தெரியவருகிறது. இதில் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பலரும் திரையுலகில் நுழைந்துள்ளனர். ஆனால் இதில் தீமைகளே அதிகமாக உள்ளது. அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபாசமாக வீடியோ பதிவிடுவதும், சாகசம் என்ற பெயரில் உயிரைப் பணயம் வைத்து வீடியோ எடுப்பதும் தற்போது அதிகரித்து உள்ளது.

இந்த செயலி 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. குழந்தைகளிடம் ஆபாசத்தை பரப்பிய காரணத்திற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் அது சம்மந்தமான 60 லட்சம் வீடியோக்களை டிக்டாக் செயலி நீக்கியது, இதனால் இந்த தடை நீக்கப்பட்டது. இருப்பினும் இதனால் ஏற்படும் தவறுகள் குறையவில்லை.

டிக்டாக் தடை:

தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலியை தடை செய்யுமாறு நெட்டிசன்கள் #BanTikTok என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது சீன ஆப் என்பதால் இதன் மூலம் நமது தகவல்கள் திருடப்படலாம் என்பதாலும் இந்த கோரிக்கை எழுந்து உள்ளது. இதற்கு மற்றொரு முக்கிய காரணம் ஒரு இளைஞர் பதிவிட்ட வீடியோ தான். அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிப்பது போன்று எடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் இளைஞர்களுக்கு பெண்கள் மீதான வன்முறையை தூண்டுவதாக கூறி பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். இத்தகைய வீடியோக்களை அனுமதிக்கும் டிக்டாக் செயலியை இந்தியாவில் தடை செய்யுமாறு கோரிக்கை எழுந்துள்ளது

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here