குட்கா தடையை நீக்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை.., உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

0
குட்கா தடையை நீக்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை.., உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
குட்கா தடையை நீக்கி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை.., உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!

தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்ய கோரி ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்து வருகிறார். இதனால் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் இது குறித்த குற்ற வழக்குகளுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை விசாரித்த நீதிபதிகள், “புகையிலை பொருட்கள் தடை விதிப்பது குறித்து மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும். இதுகுறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுக்கோ, உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கோ அதிகாரம் இல்லை. எனவே தமிழக அரசு பிறப்பித்த இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்தனர். இதனால் “சென்னை உயர்நீதிமன்றம் உட்கருத்தை தெரிந்து கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

மருத்துவமனையில் சோனியா காந்தி.,இதான் காரணமா? உடல் நலம் குறித்து அறிக்கை வெளியீடு!!

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான K.M.ஜோசப் மற்றும் நாகரத்னா ஆகியோர்கள் அடங்கிய அமர்வு குழுவிடம் விசாரணைக்கு வந்தது. இதில் “தமிழக அரசின் இந்த வழக்கு குறித்து உரிய பதில்களை இன்னும் 4 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும். மேலும் நோட்டீஸ் தயார் செய்து குட்கா, பான்மசாலா நிறுவனங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோர்களுக்கு அனுப்ப வேண்டும்.” என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 20ம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here