மாநிலத்தில் பட்டாசு விற்க, வெடிக்க தடை.,, அரசின் அதிரடி உத்தரவு!!

0
மாநிலத்தில் பட்டாசு விற்க, வெடிக்க தடை.,, அரசின் அதிரடி உத்தரவு!!

இந்தியாவில், உலக சுகாதார அமைப்பின் காற்றின் தர அளவை எந்த ஒரு நகரமும் எட்டவில்லை. குறிப்பாக டெல்லி, தொடர்ந்து 2வது ஆண்டாக உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகராக உள்ளது. பெரும்பாலும், தீபாவளி சமயங்களில் பட்டாசு வெடிக்கும் போது காற்றின் தரக் குறியீடானது அதிகமாக குறைகிறது. இதனால் டெல்லியில் மாசுப்பாட்டை குறைக்க, மாநிலத்தில் பட்டாசுகள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் 2023 ஜனவரி 1ம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தரவுகளில், டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் டெல்லியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 முதல் 2022 ஜனவரி 1ம் தேதி வரை, பட்டாசுகள் விற்பனை செய்யவும் மற்றும் வெடிக்கவும் தடை இருந்தது. மேலும் அரசால் விதிக்கப்பட்ட இந்த தடையை மீறுபவர்கள் மீது வெடிமருந்து தடுப்புச் சட்டம், ibc பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் வினித் அப்பாவுக்கா இந்த நிலைமை – ஆளே அடையாளம் தெரியாமல் உருக்குலைந்த சோகம்!!

அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு பட்டாசு விற்பனையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி அரசு, பட்டாசுக்கு விதித்த தடையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு மாநில உயர் நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 7ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here