மன உளைச்சலுக்கு ஆளான வழுக்கை தலையினர்.., நஸ்ட ஈடாக மாதம் ரூ 6,000 வழங்க அரசுக்கு மனு!!

0
மன உளைச்சலுக்கு ஆளான வழுக்கை தலையினர்.., நஸ்ட ஈடாக மாதம் ரூ 6,000 வழங்க அரசுக்கு மனு!!
மன உளைச்சலுக்கு ஆளான வழுக்கை தலையினர்.., நஸ்ட ஈடாக மாதம் ரூ 6,000 வழங்க அரசுக்கு மனு!!

தற்போதைய சமூகத்தில் வாழும் பெரும்பாலான ஆண்கள் வழுக்கை தலையுடனே காணப்படுகின்றனர். ஆனால் வழுக்கையும் ஒரு வித அழகு தான் என்பதை சில ஆண்கள் ஏற்க மறுக்கின்றனர். இதனால் பல அவமானங்களையும் சந்தித்து வருவதாக சிலர் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். இப்படி பல கேலிக்கு ஆளாகும் வழுக்கை தலை உள்ளவர்களுக்கு அரசாங்கம் ஊதிய தொகை வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது தெலுங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சேர்ந்து சமீபத்தில் புதிதாக ஒரு சங்கம் அமைத்துள்ளனர். இந்த சங்கத்தில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பாலையா என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவியில் வந்தவுடனே வழுக்கை தலை உடையவர்கள் படும் இன்னல்கள் குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், வழுக்கை தலையால் 4 பேருடன் வெளியே செல்வதற்கு அஞ்சுகிறார்கள். மேலும் திருமணம் நடக்காமல் காலம் தள்ளி போகிறது. இது போன்ற பல பிரச்சனைகளை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

தமிழகத்தில் பொங்கல் பரிசு விநியோகம்., இந்தப் பொருள் எல்லாம் எங்க காணோம்? காண்டான மக்கள்!!

சிறு வயதிலேயே வழுக்கை ஏற்பட்டு வருவதால் பலரும் வேதனை பட்டு வருகிறார்கள். அதனால் ஊனமுற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், தீராத வியாதியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் வழுக்கை தலை உடையவர்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதுவும் பொங்கல் பண்டிகைக்குள் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம். அதுமட்டுமின்றி தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த விஷயம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here