‘பாக்கியலட்சுமி’ எழில் செய்ற காரியத்தை பாருங்களே – வைரலாகும் மாஸ் வீடியோ!!

0

டிவி ஷோ மூலமாக அறிமுகமாகி தற்போது “பாக்கியலட்சுமி” சீரியலில் எழிலாக நடித்து வரும் நடிகர் தான் விஷால். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக ஒரு வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் மற்றும் தொகுப்பாளர் விஷால்

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலமாக பலர் தற்போது சினிமா துறையில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வேந்தர் தொலைக்காட்சியில் “அங்காளி பங்காளி” என்ற நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சியில் தனது பேச்சின் மூலமாக மக்களை கவர்ந்து வந்தார். இப்படியாக இருக்க, இவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

படகில் குதூகலமாய் போஸ் கொடுத்த நடிகை கீர்த்தி – வைரலாகும் புகைப்படம்!!

கூடுதலாக, இவர் டப்ஸ்மேஷ் செயலியில் தனது விடீயோக்களையும் பதிவிட்டு தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார். இவர் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகியது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலின் மூலமாக தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த சீரியலில் தனது தாய்க்கு உறுதுணையாக இருக்கும் ஒரு பொறுப்பான மகனாக இருப்பார். அதே போல் அவர் செய்யும் அனைத்து விஷயங்களுக்கும் அவரை உற்சாகப்படுத்தி கொண்டே இருப்பார். எழிலாக இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

தற்போது “பாக்கியலட்சுமி” சீரியல் தான் விஜய் தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஓடி கொண்டு இருக்கின்றது. இப்படியாக இருக்க, இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் விடீயோவினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here