இந்த குழந்தையை கலைச்சே ஆகணும்… இது தான் என்னோடு கடைசி முடிவு… ஜெனியை வார்த்தையால் நோகடிக்கும் செழியன்!!!

0

விஜய் டிவி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் எக்கசக்க ரசிகர்களை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் இன்று, குழந்தையை கண்டிப்பாக கலைக்க வேண்டும் என ஜெனியிடம் செழியன் கறாராக கூறுகிறார். அதனால் ஜெனி மிக வேதனையுடன் இருக்கிறார்.

 பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எழில் உடன் அமிர்தா வீட்டிற்கு வருகிறார். அங்கு அமிர்தாவின் அம்மா மற்றும் அமிர்தா ஆகியோரை சந்திக்கிறார். இந்நிலையில் இன்றைய கதையில்,பாக்கியா அமிர்தாவின் அப்பா மற்றும் அம்மாவிடம் அமிர்தாவை படிக்க வைப்பது மிக பெரிய விஷயம். இத எத்தனை பேரு செய்வாங்க என ஆச்சரியத்துடன் கூறுகிறார்.  மேலும் நான் பிசினஸ் ஆரம்பிக்கிறதுக்கு காரணமே அமிர்தா தான் என கூறுகிறார்.

அமிர்தாவின் அம்மா மற்றும் அப்பா, எழில் எங்க வீட்டில ஒருத்தன் ஆகிட்டான். எங்க பையன் செத்து போனதாகவே நாங்க நினைக்கல அவன்  இடத்தில எழில்லவைச்சு பாக்குறோம் என சொல்கிறார். பாக்கியா, அமிர்தா, அம்மா மற்றும் அப்பாவை வீட்டிற்கு அழைக்கிறார். அதன் பின்னர் பாக்கியா மற்றும் செல்வி, தான் உணவு சமைத்து கொடுக்கும் வீட்டிற்கு வழக்கம் போல சாப்பாடு கொடுக்க செல்கிறார்.

அங்கு இருக்கும் மேடம் அவரின் கணவரை பாக்கியாவுக்கு அறிமுகம் செய்கிறார். சாப்பாடு மிக நன்றாக இருப்பதாகவும், இதே போன்று மேலும் மேலும் சமைக்குமாறு கூறி  பாராட்டுகிறார். இதையடுத்து ஜெனி மற்றும் செழியன் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் ஜெனிக்கு வாந்தி வருகிறது. இந்த சத்தம் கேட்டு பாக்கியா வந்து அவருக்கு என்னாச்சு என கேட்டு அவரை புளிப்பாக ஏதாவது சாப்பிட சொல்கிறார்.

5 மாசம் வரைக்கும் இப்படித்தான் இருக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ என கூறிக்கொண்டு தூங்க செல்கிறார் பாக்கியா. இதை யோசித்தப்படியே படுத்துக் கொண்டிருக்கிறார் செழியன். அப்பொழுது ஜெனியிடம் செழியன் இந்த குழந்தை நமக்கு வேணாம். லேட்டா குழந்தை பெத்துக்கலாம் இப்பையே உனக்கு இந்த கஷ்டம் வேணாம் என கூறுகிறார்.

அதற்கு ஜெனி இப்ப என்ன இந்த குழந்தையை கலைக்கணுமா? என கடும் கோபத்துடன் கேட்கிறார். அதற்கு செழியன் ஆமாம் எனக்கு இந்த குழந்தையை பெத்துக்க விருப்பம் இல்ல, குழந்தையை வளர்க்க எனக்கு பெருசா ஆசையும் இல்ல, குழந்தையே பெத்துக்கலேன்னாலும் பரவால்ல, நான் வேற டாக்டர் பாக்குறேன் என கட்டன் ரைட்டாக பேசுகிறார். அதை கேட்டு அழுது கொண்டே படுக்கிறார் ஜெனி.

அதன் பின்னர் காலையில் எழுந்ததும் கீழே வரும் ஜெனியிடம் எதுக்கு நீ வேலைக்கு போற நான் செழியன் கிட்ட பேசுறேன் நீ வேலைக்கு போக வேண்டாம் என பாக்கியா கூற அதற்கு ஜெனி இல்லை நான் போறேன் இல்லனா செழியன் திட்டுவான் என் கூறுகிறார். அப்பொழுது ராஜசேகர் மனைவியிடம் இருந்து பாக்கியாவுக்கு போன் வருகிறது. அப்பொழுது அவர் உங்கள சார் பாக்கனும்னு சொல்கிறார் வர முடியுமா? என கேட்கிறார். இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here