இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா… சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0
இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா... சூடுபிடிக்கும் கதைக்களம்!!
இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா... சூடுபிடிக்கும் கதைக்களம்!!

விஜய் டிவியில் வெற்றி சீரியல்களில் ஒன்றாக இருக்கும் சீரியல் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலில் இன்று, இனியா தன் மீது வைத்திருந்த அபிப்பிராயத்தை உடைத்து அடுத்த அடுத்த போட்டிகளில் தனது திறமையால் முன்னேறுகிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியல்:

பாக்கியலட்சுமி சீரியலில்,மிகுந்த தயக்கத்துடன் மேடையில் இருக்கும் பாக்கியாவை பார்த்து இனியா பயத்துடன் இருக்கிறார். இந்நிலையில் நடுவராக இருக்கும் ரேகா அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அவரை உற்சாகப்படுத்துகிறார். இந்நிலையில் இன்றைய கதையில், மேடையில் தன்னுடைய நடன திறமையை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் பாக்கியா. அதை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த படி கைதட்டி கொண்டிருக்கிறார் இனியா .

இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா... சூடுபிடிக்கும் கதைக்களம்!!
இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா… சூடுபிடிக்கும் கதைக்களம்!!

அதன் பின்னர் பாக்கியாவின் நடனத் திறமையை அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர். இருப்பினும் இனியா மட்டும் தன்னுடைய அம்மாவை நம்பாமல் அவரை கிண்டலாக பேசி ஏளனம் செய்கிறார். இந்நிலையில் பாக்கியா தன்னுடைய நடன திறமையால் அடுத்த சுற்றான வினாடி வினா போட்டிக்கு தகுதி பெறுகிறார். அடுத்த சுற்றில் முதல் போட்டியாளரிடம் கேட்கப்பட்ட பொது அறிவு கேள்வியை கேட்டு இனியா மற்றும் பாக்கியா பயப்படுகின்றனர்.

இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா... சூடுபிடிக்கும் கதைக்களம்!!
இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா… சூடுபிடிக்கும் கதைக்களம்!!

அடுத்ததாக வரும் பாக்கியாவிடம் ரேகா, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு பாக்கியா தான் ஒரு கேட்டரிங் வைத்து நடத்துவதாக கூறுகிறார். அப்பொழுது ரேகா ஒரு அம்மாவுக்கு எதில் சந்தோஷம் என கேட்கிறார். அதற்கு பாக்கியா அம்மாவாக இருப்பதிலும் சந்தோசம் இருக்கிறது, தனக்கென ஒரு வேலை செய்வதிலும் சந்தோசம் இருக்கிறது. நான் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் போது என் பொண்ணுக்கு இது அவமானமாக இருந்தது.

இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா... சூடுபிடிக்கும் கதைக்களம்!!
இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா… சூடுபிடிக்கும் கதைக்களம்!!

அதுவே இப்பொழுது, நான் செய்யும் வேலை பற்றி அவளே பெருமையாகக் கூறிக் கொண்டிருக்கிறார் என பதில் அளிக்கிறார். அதன் பின்னர் சிறந்த அம்மா எப்படி இருக்கனும் என்ற கேள்விக்கு, செல்வியை உதாரணமாக கூறி மிக சிறப்பாக பதில் அளித்து அனைவரின் கைதட்டலையும் பெறுகிறார். இவ்வாறு அடுத்தடுத்து போட்டியாளர்களிடம் கேள்விகள் கேட்கப்படுகிறது. அதன் பின்னர் நடுவர்கள் தீர்ப்பு குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா... சூடுபிடிக்கும் கதைக்களம்!!
இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா… சூடுபிடிக்கும் கதைக்களம்!!

அப்பொழுது மேடைக்கு வரும் இனியா சூப்பரா பேசியதாக கூறி பாக்கியாவுக்கு கைகொடுத்து பாராட்டுகிறார். மேலும் இனியா பாக்கியாவிடம், என்ன நீ மட்டும் இவ்வளவு கூல்லாக இருக்க என கேட்க, அதற்கு பாக்கியா எனக்கு பரிசு கிடைக்கனும்னு எந்த ஆசையும் இல்லை. உனக்காக தான் வந்தேன், இவ்வளவு நாள் என்னை நம்பாமல் கேலியும் கிண்டலும் பண்ணிட்டு இருந்த நீயே என்ன சூப்பரா பண்ணதாக சொல்லி பாராட்டிவிட்டாய் இதுக்கு அப்புறம் எனக்கு என்ன வேண்டும் என கேட்கிறார் பாக்கியா.

இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா... சூடுபிடிக்கும் கதைக்களம்!!
இனியாவின் எண்ணத்தை உடைத்து அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெரும் பாக்கியா… சூடுபிடிக்கும் கதைக்களம்!!

இந்நிலையில் இனியா எப்படியும் உனக்கு தான் இந்த பரிசு கிடைக்கும் என்று கூறி கொண்டு கீழே செல்கிறார். அதன் பின்னர் நடுவரான ரேகா தீர்ப்பை சொல்ல தயாராகிறார். இந்நிலையில் இனியா, பாக்கியாவுக்குஎப்படியாவது பரிசு கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த படி இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here