வேலைக்கு செல்ல திட்டமிடும் ஜெனி…!சந்தோஷத்தின் உச்சத்தில் செழியன்!!!

0

விஜய் டிவி டாப் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய கதையில் ஜெனி வேலைக்கு போக வேண்டும் என முடிவு செய்கிறார். அதை கேட்கும் செழியன் மிகுந்த சந்தோஷத்தில், அவரின் முடிவுக்கு பாராட்டு கூறி தானே வேலை தேடித் தருவதாக கூறுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி தான் யாரும் இன்றி ஹாஸ்பிடலில் இருப்பதாக ராதிகாவிடம் போனில் கூறி, ராதிகாவின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார். இந்நிலையில் இன்றைய கதையில், எழில் பாக்கியாவை மருத்துவமனைக்கு செக்அப்பிற்கு செல்ல கூப்பிடுகிறார். அதற்கு நிறைய வேலைகள் இருப்பதாக கூறி மறுக்கிறார்.

 

இதனால் கோபப்படுகிறார் எழில். இதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வருகிறார் செல்வி. அப்பொழுது அவரின் நலம் குறித்து விசாரிக்கும் ஜெனி மற்றும் எழில், செல்வி தன் குடும்பம் தன்னை கவனித்து கொண்டதை பற்றியும், எவ்வாறு ஓய்வு எடுத்தேன் என்பது பற்றியும் நகைச்சுவையாக கூறுகிறார்.

அதன் பின்னர் கோபி அடிபட்டதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். இதையடுத்து செல்வி வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பிக்கிறேன் என்று கூறி அடுப்படி உள்ளே செல்கிறார். அதன் பின்னர் ஜெனி ரூமுக்கு செல்லும், அங்கு செழியனிடம், நான் வேலைக்கு செல்லட்டுமா ? என கேட்கிறார். அதற்கு செழியன், ஜெனியை கிண்டல் செய்கிறார். அதன் பிறகு தான் எதற்கு வேலைக்கு போக திட்டமிட்டு உள்ளேன் என்பதனையும், தன் அம்மா தன்னிடம் கூறியதையும் செழியனிடம் கூறுகிறார் ஜெனி.

மேலும் பாக்கியாவை  மாதிரி தன்னையும் இந்த குடும்பம் மதிப்பிடக்கூடாது. அதற்காக இந்த முடிவு எடுத்தாததாக கூறுகிறார். இதை கேட்ட செழியன் மகிழ்ச்சியடைவததோடு, அவரின் இந்த முடிவை பாராட்டி, நானே உனக்கு வேலை தேடி தருகிறேன் என்று  கூறுகிறார். அதன் பின்னர் எழில், அமிர்தா வீட்டிற்கு கார் உடன் வருகிறார். அங்கு ஊருக்கு கிளம்ப தயாராக உள்ளனர் அமிர்தாவின் குடும்பம்.

அப்போது அமிர்தாவை நோக்கி எழில், எப்போ திரும்பி வருவீங்க என கேட்க, அதற்கு அமிர்தா ஒரு வாரத்தில் வருவதாக கூறுகிறார். அதன் பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் பார்த்து கொள்கின்றனர். அதன் பிறகு அமிர்தா காரில் ஏறி கிளம்புகிறார். இதையடுத்து வீட்டில் ஹாய்யாக உட்கார்ந்து இருக்கும் கோபி போனில் ராதிகாவின் போட்டோவை பார்த்து ராதிகா ராதிகா என கூப்பிட படி உள்ளார்.

அதன் பின்னர் அவருக்கு போன் செய்து பேசுகிறார். அப்போது இன்று உனக்கு கோர்ட்டுக்கு  போக வேண்டிய வேலை உள்ளது. அதனால் நானும் உன்னுடன் வரவா? என கேட்கிறார் கோபி. அதை ஏற்க மறுக்கிறார் ராதிகா. அப்பொழுது கண்டிப்பாக ராஜேஷ் உனக்கு விவாகரத்து தந்து விடுவார் என வில்லத்தனமாக கூறி போனை வைத்து விடுகிறார் கோபி. இவ்வாறு இன்றைய கதை முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here