இன்னைக்கு நைட்டு உன் வீட்டுக்கு வந்து எல்லா உண்மையை சொல்றேன்.. ரெடியா இரு.. கோபியை மிரட்டும் ராஜேஷ்!!!

0

விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய காட்சி அமைப்பாக கோபியும் ராஜேஷ் சந்திக்கின்றனர். இதனால் அவர்கள் இடையே ராதிகா தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டு முட்டி கொள்கின்றனர். மேலும் ராஜேஷ், கோபியின் வீட்டில் அனைத்து உண்மைகளையும் சொல்லப் போவதாக கோபியை மிரட்டுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல் நேற்றைய கதையில் ராஜேஷ், பார்க்கில் கோபி மற்றும் ராதிகாவை ஒன்றாக பார்த்து கடுமையான கோபத்தில் இருக்கிறார். இந்நிலையில் இன்று கோபியை பின் தொடரும் ராஜேஷ் நடு ரோட்டில் வழி  மறித்து கோபி, ராதிகா வீட்டிற்கு போவதை பற்றி கடுமையாக சாடுகிறார். அப்பொழுது கோபி இந்த இடத்தில் வைத்து அதை பேச வேண்டாம் என சொல்ல அதற்கு ராஜேஷ் உன்ன பார்க்க உன் வீட்டுக்கு வரேன் என்று சொல்லுகிறார். இதை கேட்டு அதிர்ந்து போகிறார் கோபி.

மேலும் ராஜேஷ் கோபியிடம் இவ்வளவு பெரிய பசங்கள வச்சுட்டு நீ இப்படி என் வீட்டுக்கு வரியேன்னு கண்டமேனிக்கு திட்டுகிறார். அதை தொடர்ந்து ராஜேஷ், கோபியின் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்க போவதாக  சொல்கிறார். உடனே கோபி என்னுடைய வீட்டிற்கு வந்தால் உன்னை கொன்று விடுவதாக மிரட்டுகிறார். அதையும் மீறி ராஜேஷ் கோபியிடம் வருவேன் எல்லா உண்மையை சொல்வேன் நீ ரெடியா இருன்னு சொல்லிட்டு கார் எடுத்து கிளம்புறார்.

இந்நிலையில் தயாரிப்பாளரை பார்க்க சென்ற எழில், தன்  அம்மா பாக்யாவுக்கு போன் செய்து இனியாவை, தாத்தா அல்லது செழியனை விட்டு ஸ்கூலில் இருந்து கூட்டி வருமாறு கூறுகிறார்.இந்நிலையில் தயாரிப்பாளரை பார்க்க சென்ற எழில், அங்கு தயாரிப்பாளர் கதையை மாற்றுமாறு சொல்ல வேதனையில் இருக்கிறார். இதனால் நேரமாகும் என அறிந்த எழில் , இதையடுத்து வீட்டில் இருவரும் இல்லாததால் கோபி அல்லது ஜெனியை அனுப்பி கூப்பிட்டு வர திட்டமிடுகிறார் பாக்கியா.

இந்நிலையில் கோபி போலீஸ் ஒருவரிடம் ராஜேஷ் பற்றிய அனைத்து விவரங்களையும் சொல்கிறார். அதாவது ராஜேஷ் என்பவர் தன்னுடைய பேங்கில் லோன் வாங்கிவிட்டு கட்டாமல் தன்னிடம் சண்டைக்கு வருவதாகவும், வீட்டிற்கு வந்து மிரட்டுவேன் என கூறியதாகவும் தெரிவிக்கிறார்.

இவ்வாறு பல பேச்சு வார்த்தைகள் இருவர் இடையேயும் நிகழ்கிறது. அதற்குள் பாக்கியா போன் செய்து இனியாவை கூட்டிட்டு வர முடியுமா என்று கேட்க , அதற்கு சரி என சொல்லி இனியாவை அழைத்து செல்ல ஸ்கூலுக்கு செல்கிறார் கோபி. அப்போது மயூவை கூப்பிட ராஜேஷ் அங்கு வருகிறார். இவ்வாறு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here