அடடே.., பாக்கியலட்சுமி ரித்திகாவுக்கு இவ்வளவு அழகான கணவரா?? திருமண புகைப்படம் வைரல்!!

0
அடடே.., பாக்கியலட்சுமி ரித்திகாவுக்கு இவ்வளவு அழகான கணவரா?? திருமண புகைப்படம் வைரல்!!
அடடே.., பாக்கியலட்சுமி ரித்திகாவுக்கு இவ்வளவு அழகான கணவரா?? திருமண புகைப்படம் வைரல்!!

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகாவின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரித்திகா VS வினு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நாளுக்கு நாள் விறுவிறுப்பான பல ட்விஸ்டுகள் அரங்கேறி வருகின்றன. இந்த சீரியலில் அமிர்தா, எழில் காதல் விஷயம் எப்போது தெரிய வரும் இவர்கள் சேர்வார்களா?? மாட்டார்களா?? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் ரித்திகாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இவர் விஜய் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்றி வரும் வினுவை தான் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் எப்போது என்ற தகவல் கிடைக்கவில்லை என்றாலும், வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 27ம் மாலை நடைபெற இருக்கிறது. இது தவிர இவர்கள் இருவரும் விஜய் டிவியில் பணிபுரிவதால் இவர்களது திருமணம் காதல் திருமணமாக இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது.

புரோ கபடி 2022: UP யோதாஸை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்…, புள்ளிபட்டியலில் முன்னேறி அசத்தல்!!

இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இன்ஸ்டா பக்கத்தில் தங்களது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் காதும் காதும் வச்ச மாதிரி திருமணத்த முடிச்சுட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் உங்களுக்கு இவ்வளவு அழகான கணவரா?? என கூறி வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here