உயிருடன் வரும் அமிர்தாவின் முன்னாள் கணவர்.., எழிலுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!!

0
உயிருடன் வரும் அமிர்தாவின் முன்னாள் கணவர்.., எழிலுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!!
உயிருடன் வரும் அமிர்தாவின் முன்னாள் கணவர்.., எழிலுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.., பாக்கியலட்சுமி அப்டேட்!!!!

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, ஈஸ்வரி, செல்வி எல்லோரும் இனியாவை கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இன்னொரு பக்கம் ஜெனி தன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாருமே இல்லாததால் அமிர்தா எழிலின் ரொமான்ஸ் காட்சி தான் தற்போது சீரியலின் ஹைலைட்டாக உள்ளது. இப்படி இருக்கையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் அமிர்தாவின் முன்னாள் மாமனார் மாமியார் தன் மகன் கணேஷ் இறந்த நாளை நினைத்து திதி கொடுக்கின்றனர். அப்போது இருவரும் கணேஷை நினைத்து கண்கலங்கி வருத்தப்படுகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த நேரம் வீட்டு வாசலில் கணேஷ் வந்து நிற்க இருவரும் பார்த்து அதிர்ச்சியாகின்றனர். பின் கணேஷ் வந்த சந்தோஷத்தில் நீ இத்தனை நாள் நீ செத்துப் போயிட்டனு நினச்சு கஷ்டப்பட்டோம். ஆனால் நீ உயிரோட வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கணேஷ் அமிர்தா எங்கே என்று கேட்க இருவரும் அதிர்ச்சியாகின்றனர். பின் அந்த வீட்டில் அமிர்தா, நிலா, எழில் சேர்ந்து இருக்கும் புகைப்படம் உள்ளது. இதை கணேஷ் பார்த்தால் என்னாகும் என்பது தான் கதையின் அடுத்த ட்விஸ்ட்டாக உள்ளது. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

பொசுக்குன்னு காலில் விழுந்த ஆண்மகன்.., பதறிப்போன ராஷ்மிகா மந்தனா.., கல்யாண வீட்டில் நடந்த கலாட்டா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here