கேலி செய்த கோபியை ஓடவைத்த பாக்கியா., டென்ஷனாகி உச்சகட்ட காண்டில் கோபி செய்த காரியம்! லேட்டஸ்ட் எபிசோட்ஸ்!!

0
கேலி செய்த கோபியை ஓடவைத்த பாக்கியா., டென்ஷனாகி உச்சகட்ட காண்டில் கோபி செய்த காரியம்! லேட்டஸ்ட் எபிசோட்ஸ்!!
கேலி செய்த கோபியை ஓடவைத்த பாக்கியா., டென்ஷனாகி உச்சகட்ட காண்டில் கோபி செய்த காரியம்! லேட்டஸ்ட் எபிசோட்ஸ்!!

விஜய் டிவியில், விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரின், இன்றைய தொடக்கத்தில் பாக்கியா மற்றும் செல்வி வாக்கிங் போய் கொண்டிருக்கிறார்கள். அப்போது, கோபியும் அதே வழியில் வாக்கிங் வருகிறார். அப்போது பாக்கியவை கோபி, கேலி செய்கிறார். பாக்கியவோ கோபியின் கேலிக்கு அசராமல் தலையை அவிழ்த்துவிட்டு, கோபியை கேலி செய்து ஓட விடுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பின்பு எழில் வீட்டு வாசல் முன்னாடி கோபியின் பெயர் இருந்த இடத்தில் பாக்கியா பெயர் போட்ட போர்டை வைத்து விடுகிறார். இதை பார்த்த ராமமூர்த்தியும் சந்தோசப்படுகிறார். பின்பு இருவரும், கோபி இத பாத்த கோவ படுவான், அத பாக்கணும்னு சொல்லி பேசிட்டு இருக்கிறார்கள். அப்போது எழில் மற்றும் ராமமூர்த்தியும் பாக்கியா பெயர் போட்ட போர்டின் முன்னாடி நின்னு செல்பி எடுத்துக் கொள்கிறார்கள்.

பின்பு கோபி அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியவை பற்றி பேசுகிறார். பாக்கிய ரொம்ப மாறிட்டா, பார்லர் போறா, காலைல நான் வாக்கிங் போறப்ப என்ன பாத்ததும் முடிய அவித்து விட்டுட்டு போறான்னு சொல்லி புலம்பிக்கொண்டு இருக்கிறார். அவரது நண்பர் நீதான் அவுங்கள வேணான்னு சொல்லிட்லேலா? அப்புறம் அவுங்க என்ன பண்ண உனக்கு என்ன என்று அட்வைஸ் சொல்கிறார்.

தடையை மீறி ஓடிய வாரிசு, துணிவு படத்தின் சிறப்பு காட்சிகள்.., விளக்கம் கேட்டு திரையரங்குகளுக்கு நோட்டீஸ் விட்ட அரசாங்கம்!!

பின்பு வீட்டுக்கு வரும் கோபி பாக்கியா பெயர் போட்ட போர்டை பாத்ததும் டென்ஷன் ஆகி , அவரது வீட்டுக்கு போகிறார். அப்போது அங்கு ராமமூர்த்தி கோபி வீட்டின் ஹாலில் தூங்குகிறார். உள்ளே நுழைந்ததும், ராமமூர்த்தியை எழுப்பி பாக்கியா பெயரை வைத்தததை சொல்லி ராதிகா மற்றும் ராமமூர்த்தியிடம் கோவப்பட்டு கத்துகிறார். பின்பு பாக்கியா பெயர் போட்ட போர்டை எடுத்து கொண்டு பாக்கியாவின் வீட்டிற்குள் செல்கிறார். பின்பு பாக்யாவுடன் கத்தி சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here