பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு டஃப் கொடுக்கும் பாக்கியலட்சுமி ராதிகா… இதுல கூடவா போட்டி போடுவிங்க!!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மக்கள் மத்தியில் பரிச்சியமானவர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் அந்த சீரியலில் ராதிகாவாக நடித்து வந்த ஜெனிபர் அவர்கள். இவர் தற்போது தன்னுடைய வளைகாப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து திரைக்கு வந்தவர் ஜெனிபர். ஆனால் இவரை மக்களுக்கு நன்கு அறிய வைத்தது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் கதையின் நாயகி பாக்கியாவின் திடீர் தோழியாகவும், பாக்கியாவின் கணவர் கோபி அவர்களின் முன்னாள் காதலி ராதிகாவாகவும் நடித்து வந்தார்.

மேலும் இந்த சீரியல் விட்டு திடீரென்று விலகுவதாக அறிவித்த இவர், அதற்கு இரண்டு காரணங்களை கூறி இருந்தார். அதில் ஒன்று, இனி பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா கதாபாத்திரம் நெகடிவ் ரோல்லாக மாற உள்ளதாகவும் இதனால் ரசிகர்கள் தன்னை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்க கூடும் என்பதாலும் விலகியதாக கூறினார். மேலும் மற்றொரு காரணமாக அவர் கூறியது, தான் நீண்ட நாட்களுக்கு பிறகு கர்ப்பமடைந்த உள்ளதால் இனி தொடர்ந்து சீரியலில் நடிப்பது சாத்தியமற்றது என தெரிவித்து இருந்தார்.

சமீபகாலமாக நடிகைகள் தங்களின் கர்ப்ப கால புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து அதை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதாவது பாரதி கண்ணம்மா வெண்பா தான் குழந்தை உண்டான ஒரு சில மாதங்களில் இருந்தே பல்வேறு விதமாக போட்டோ ஷூட் செய்து இதை ஷேர் செய்து வருகிறார். தற்போது அவரை போன்று பாக்கியலட்சுமி சீரியலின் முன்னாள் ராதிகாவும் தன்னுடைய கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here