அது சிரிச்சா நானும் சிரிப்பேன்… அது அழுதா என்னால தாங்கவே முடியாது… தங்கைக்காக உருகும் பாக்கியலட்சுமி எழில்!!!

0

பாக்கியலட்சுமி சீரியல் மக்களால் அதிகம் பார்க்கப்படும் விஜய் டிவி சீரியல்கள் வரிசையில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் எழிலாக விஜே விஷால் அவர்களும், இனியாவாக நேஹா அவர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து செய்த ஒரு ரீல்ஸ் வீடியோவை நேஹா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

வேலைக்கு போகாமல் குடும்பத்திற்காக தன்னுடைய கனவுகள் மற்றும் ஆசைகளை துறந்து தியாகம் செய்து ஒவ்வொரு வீட்டிலும் வாழும் இல்லத்தரசிகளின் கதையை மையமாக கொண்டது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் தனது அம்மாவுக்காக வீட்டிலும் அவரின் தொழிலுக்கும் முழு உறுதுணையாக இருக்கும் அவரின் இரண்டாவது மகன் எழில் கதாபாத்திரத்தில் விஜே விஷால் நடித்து வருகிறார்.

இவர் பிரபல டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் இவருக்கு இந்த சான்ஸ் கிடைத்தது. அதே போல் இந்த சீரியலில் இவரின் தங்கையாக பாக்கியாவின் மூன்றாவது மகள் இனியாவாக நடித்து வருபவர் நேஹா, இவர் பல டிவி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பாசமலர் படத்தில் இடம்பெற்ற என் தங்கை தான் எனக்கு எல்லாம்…என்று வசனத்திற்கு ரீல்ஸ் செய்து உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here