கோபியின் பித்தலாட்டத்தை தெரிந்து கொண்டு பாக்கியா எடுக்கும் முடிவு – விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி!

0
கோபியின் பித்தலாட்டத்தை தெரிந்து கொண்டு பாக்கியா எடுக்கும் முடிவு - விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி!

பாக்கியலட்சுமி தொடரில் கோபி ராதிகா உறவை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவுக்கு தெரிய வந்துவிடுகிறது. மழையில் நனைந்த படியே பாக்கியா வீடு வந்து சேர ராமமூர்த்தி மற்றும் செல்வி பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மறுபுறம் ஹாஸ்பிடலில் மொத்த குடும்பமும் கோபியை நலம் விசாரித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பாக்கியாவை ஹாஸ்பிடலில் காணவில்லை என்று எழில் மற்றும் ஜெனி ரிசப்சனில் விசாரிக்கின்றனர்.

ஆனால் ரிசப்சனில் ராதிகாவை கோபியின் மனைவி என்று நினைத்து ஆமா வந்தாங்க. பணம் எல்லாம் கட்டிட்டு தான் போனாங்க என சொல்கிறார்கள். இதனால் குழம்பி போன எழிலை ஈஸ்வரியும் வீட்டுக்கு போய் எல்லாத்தையும் பேசிக்கலாம் என சமாதானப்படுத்துகிறார். மறுபுறம் வீட்டில் பாக்கியா செய்வதறியாது இருக்க, செல்வி வந்து என்னாச்சு என கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள். பாக்கி யா கோபத்தில் கத்த கீழே வந்துவிடுகிறாள்.

வெறும் கயிற்றில் முன்னழகை மறைத்த பூஜா ஹெக்டே.. கவர்ச்சியின் எல்லைக்கு சென்ற பீஸ்ட் நாயகி!

அதன்பின்னர் செழியன், இனியா, ஜெனி வீட்டுக்கு வருகின்றனர். ஜெனியை அழைத்து கொண்டு பாக்கியாவை மீண்டும் பார்க்க போகிறாள் செல்வி. இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன. இதுவரை வெகுளியாக தன் கணவனை கண்முடி தனமாக நம்பிய பாக்கியா கண்டிப்பாக இனிமேல் சுதாரித்து கொள்வார். மேலும் கூடிய விரைவில் கோபியை தலைமுழுகி விட்டு தனி ஒரு ஆளாக தன் குடும்பத்தை வழி நடத்த போகிறார். ரசிகர்களும் அந்த தருணத்திற்கு தான் காத்து கொண்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here