மன்னிச்சுடுங்க.. ரொம்ப வேதனையா இருக்கு.. பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக நினைக்கும் கோபி!

0
மன்னிச்சுடுங்க.. ரொம்ப வேதனையா இருக்கு.. பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலக நினைக்கும் கோபி!

சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களிலேயே அதிக டிஆர்பி ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. ஆரம்பத்தில் இந்த தொடரும் பிற தொடர்களை போலவே சாதாரண அளவிலேயே வரவேற்பை பெற்றது. ஆனால் எப்பொழுது கோபி பாக்கியாவை ஏமாற்றிவிட்டு ராதிகா பின்னால் சுற்ற ஆரம்பித்தாரோ அன்று இந்த சீரியல் சூடு பிடிக்க தொடங்கியது.

மேலும் மக்கள் அனைவரும் பாக்கியா மீது பாவப்பட்டு கோபியை திட்டி தீர்த்து வருகின்றனர். கோபி ரோலில் நடித்து வரும் சதிஷ், இது வெறும் நடிப்பு தான் எனக்கூறி தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், ‘தெரிந்தோ தெரியாமலோ கோபி கதாபாத்திரம் மூலமாக உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது வெறும் நடிப்பு தான். இப்படி நடிக்க எனக்கே மனசு கஷ்டமாக இருக்கும். சீரியலை விட்டு போய் விடலாம் என்றும் தோன்றும். பாசிட்டிவ் ஆன ரோல்களை தேர்தெடுத்து நடிக்கலாம் என்று நினைப்பேன், ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் இல்லையா. அதனால் தான் தொடர்ந்து நடிக்கிறேன்’ என்று தெளிவு படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here