பணத்தை தொலைத்து விட்டு அக்கம்பக்கத்தினருக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் எழில், பாக்கியா… அடுத்து நடக்க இருக்கும் விபரீதம்?

0

பல்வேறு விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பணத்தை தன்னுடைய தப்பினால் இழந்ததை அறிந்த பாக்கியா கதறி அழுகிறார். இந்நிலையில் தாங்கள் செய்த வேலைக்காக பணத்தை எதிர்பார்த்து பாக்கியாவின் வீட்டில் கூடிருக்கின்றனர் பக்கத்து வீட்டு பெண்கள்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் பலவித தடைகளை தாண்டி ஆர்டரை வெற்றிகரமாக முடித்து பெற்ற பணத்தை போன் ஆன்லைன் திருட்டு மூலம் தன்னை அறியாமல் பறிகொடுத்த உள்ளார் பாக்கியா. இது தெரியாமல் பணத்தை எடுக்க எழில் பாக்கியாவுடன் பணம் எடுக்க பேங்க் செல்கிறார்.

இந்நிலையில் இன்று, செக் புக் எழுதி பேங்க் ஸ்டாப்பிடம் கொடுக்கிறார் பாக்கியா, அதற்கு அந்த ஸ்டாப் மேடம் உங்க அக்கவுண்ட்ல இவ்வளவு பணம் இல்ல என பேங்க் ஸ்டாப் சொல்கிறார். அதை கேட்டு அதிர்ந்த பாக்கியா மற்றும் எழில் இல்ல சார் நேத்து தான் என் அக்கவுண்ட்க்கு பணம் வந்துச்சு நல்லா பாருங்க என பதற்றத்துடன் கூறுகின்றனர்.

உடனே பேங்க் ஸ்டாப் ஆம் நேத்து  3 லட்சம் வந்திருக்கு நீங்க நேத்தே 3,30,000 ரூபாய் எடுத்துட்டீங்க என சொல்கிறார். இதையடுத்து அதிர்ச்சியில் கூச்சலிடும் பாக்கியாவை அழைத்து கொண்டு மேனேஜர் ரூம் செல்ல அவரும் சரி பார்த்து ஆமாம் நீங்க தான் பணம் எடுத்துருக்கீங்க என கூறுகிறார்.

மேலும் பேங்க் விவரங்களை யாரிடமாவது கொடுத்தீங்களா என கேட்க அதற்கு பாக்கியா இல்ல நான் யாருக்கும் கொடுக்கல என சொல்கிறார். மேலும் பணம் எடுப்பதற்காக மெசேஜ் வந்துருக்கா என எழில் போன் வாங்கி பார்க்க அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின்னர் செய்வதறியாமல் பேங்க் விட்டு வெளியே செல்கின்றனர் பாக்கியா மற்றும் எழில். மேலும் பாக்கியா வீட்டில் சமையல் செய்த அனைத்து பெண்களும் தன் வீடு வாசலில் நிற்பதை பார்த்து பயத்தில் எழிலிடம் புலம்புகிறார். மேலும் எழில் பணம் காணாமல் போனதை இப்போ சொல்ல வேணாம் என கூறுகிறார்.

இந்நிலையில் பணம் கிடைத்துவிடும் என்ற சந்தோஷத்தில் பெண்கள் அனைவரும் கூடி இருக்க அவர்களிடம் எழில் முழு பணத்தையும் இப்போ எடுக்க முடியாது இரண்டு நாள் ஆகும் என பேங்க் மேனேஜர் சொன்னதாகச் சொல்கிறார்.

இதனால் அதிர்ச்சியான பெண்கள் ஒருவர் மாறி ஒருவர் பாக்கியாவை திட்டிவிட்டு கிளம்புகின்றனர். அதன் பின்னர் வீட்டில் இருக்கும் அனைவரும் பாக்கியாவிடம் துருவி துருவி கேள்வி கேட்கின்றனர். இந்நிலையில் ஜெனி ATM கார்டு விவரம் பற்றி யாராவது போன் பண்ணி கேட்டாங்களா நல்லா யோசிச்சு சொல்லுங்க என பாக்கியாவிடம் கூறுகிறார்.

இதையடுத்து செல்வி அக்கா நேத்து உங்களுக்கு ஒரு போன் வந்துச்சே நீங்க கூட எல்லாம் சொன்னீங்களே என சொல்ல , அதிர்ந்த குடும்பம் நடந்ததை பாக்கியாவிடம் கேட்கின்றனர். பாக்கியா நடந்ததை கூறுகிறார். தான் தெரியாமல் செய்த தப்பை நினைத்து கதறி அழுகிறார் பாக்கியா.

மேலும் வீட்டில் ஆளாளுக்கு கண்டபடி பாக்கியாவை திட்டுகின்றனர். அந்த நேரத்தில் மளிகை கடைக்காரர் வந்து தனக்கு தரவேண்டிய பணத்தை கேட்கிறார். அவர்களிடம் எழில் இரண்டு நாட்களில் செட்டில் பண்ணுவதாக கூறுகிறார்.

அப்பொழுது கோபி இரண்டு நாள் இரண்டு நாளுன்னு சொல்ற எப்படி கொடுப்ப எங்க வச்சிருக்க பணம் எப்படி திரும்ப வரும் என சரமாரியாக திட்டுகிறார். அதை நினைத்து அழுது கொண்டே இருக்கிறார் பாக்கியா. இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here