ராதிகாவை பச்சையாக திட்டும் ராஜேஷ் – கோபியால் நேர்ந்த விபரீதம்! விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி எபிசோட்!!

0
ராதிகாவை பச்சையாக திட்டும் ராஜேஷ் - கோபியால் நேர்ந்த விபரீதம்! விறுவிறுப்பாகும் பாக்கியலட்சுமி எபிசோட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவை ராஜேஷ் திட்டுகிறார். இதனால் கோபப்பட்ட கோபி ராஜேசுடன் சண்டையில் இறங்குகிறார். இதுகுறித்த காட்சிகள் காட்டப்பட்டு எபிசோட் சூடுபிடிக்கிறது.

சூடுபிடிக்கும் எபிசோட் ;

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ,ராதிகாவுக்கு கோபி பற்றிய உண்மை தெரிந்ததால் அவரை வெறுத்து ஒதுக்குகிறார். கோபி காலில் விழுந்து கெஞ்சியும், ராதிகா மனம் இரங்கவில்லை. இதையடுத்து, விரைவில் ராதிகா மனம் மாறுவார் என கோபிக்கு ராதிகா அம்மா ஆறுதல் சொல்கிறார். அடுத்த கட்டமாக, தனது மகள் மயூவை கோபியிடம் பேசக்கூடாது என ராதிகா சொல்கிறார். ஆனால் இதைக் கேட்காத மயூ, அப்படியெல்லாம் இருக்க முடியாது எனக் கூறி ராதிகா பேச்சைக் கேட்க மறுக்கிறார். இது ஒருபுறமிருக்க ராஜேஷ், கோபியை வெறுப்பேற்றுகிறார்.

இதையடுத்து, ராஜேஷ் கோபி இடையே கைகலப்பு ஏற்படுகிறது. இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ராதிகாவிடம், “நான் கெட்டவன்னு என்ன விட்டுட்டு கோபி பின்னால போன, இப்போ அவனும் கெட்டவன்னு தெரிஞ்சிருச்சு”. அடுத்து யார் பின்னாடி போக போற என ராஜேஷ் பச்சையாக பேசுகிறார். இந்தப் பேச்சைக் கேட்ட ராதிகா கூனிக்குறுகி போகிறார். இதனால் ராதிகா அடுத்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here