திருட்டில் மொத்த பணத்தையும் பறிகொடுக்கும் பாக்கியா…அடுத்து நடக்கவிருக்கும் விபரீதம் என்ன???

0

விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் சமையல் ஆர்டர் மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் திருட்டு மூலம் பறிகொடுக்கிறார். இதை அறியாத எழில் சந்தோஷமாக பணம் எடுக்க பேங்க் செல்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல், 1000 பேருக்கு வெற்றிகரமாக சமைத்து கொடுத்ததன் பெயரில் பாக்யாவுக்கு 3 லட்சம் பணம் கிடைக்கிறது. இந்நிலையில் இன்று,பணம் கிடைத்த சந்தோஷத்தில் பாக்கியா மற்றும் செல்வி பேசி கொண்டு இருக்கின்றனர். அப்பொழுது பாக்யாவுக்கு ஒரு போன் கால் வருகிறது.

அதில் பேசும் நபர் உங்க ATM  கார்டு பிளாக் ஆகி விட்டதாகவும் அதை சரி செய்ய உங்க கார்டு விவரங்கள் தருமாறு கேட்க கார்டு பற்றிய அனைத்து விவரங்களை சொல்கிறார் பாக்கியா. அதன் பிறகு மீண்டும் கால் செய்து OTP நம்பரை  கேட்க அதையும் கூறுகிறார் பாக்கியா.

இந்நிலையில் ஆபீஸ் சென்ற கோபி தன்னுடைய அக்கவுன்டில் பணம் இல்லை என்பதை அறிந்தது தனது ஆபீஸில் வேலை செய்யும் ஒருவரை கூப்பிட்டு இஷ்டத்திற்கு பேசி திட்டி விடுகிறார். மேலும் இந்த மாத வீட்டு செலவுக்கு என்ன செய்வது என புலம்பி கொண்டிருக்கிறார்.

இதையடுத்து  வீட்டில் ஜெனிக்கு பிறக்க இருக்கும் குழந்தை பற்றி சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். சிறிது நேரம் கழித்து பாக்கியா எழிலை கூப்பிட்டுக்கொண்டு பேங்க் செல்கிறார். அப்பொழுது கோபி பாக்கியாவிடம் எல்லா பணத்தையுமா எடுக்கப் போற என கேட்கிறார்.

 

அதன் பின்னர் இருவரும் பேங்க் கிளம்புகின்றனர்.இந்நிலையில் பக்கத்து வீட்டு பெண்கள் சிலர் வந்து தாங்கள் செய்த வேலைக்கு பணத்தை கேட்டு வெளியே நிற்கின்றனர்.  பாக்கியாவின் மாமனார் அவர்களிடம் பேசி கொண்டு இருக்கிறார்.

இதனால் ஈஸ்வரி கோவப்பட்டு  பாக்கியா என்ன பணத்தை கொண்டு ஓடியா போபோறா வீட்டுக்கு வந்து தருவாளே அப்புறம் இங்க வந்து ஏன் இப்படி கூட்டம் போடுறீங்க என கேட்கிறார். இதையடுத்து பேங்க்கிற்கு பணம் எடுக்க சென்ற எழில் மற்றும் பாக்கியா மிகுந்த சந்தோஷத்துடன் செக் புக் எழுதி பணம் எடுக்க கொடுக்கின்றனர். இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here