பலவித தடைகளை மீறி சமையல் ஆர்டரை வெற்றிகரமாக செய்து முடிக்கும் பாக்கியா… இன்றைய பாக்கியலட்சுமி கதைக்களம்!!!

0

விஜய் டிவியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பாகி வருவது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று பல பிரச்னைகள், சோதனைகள்  தாண்டி ஒரு வழியாக சமையலை செய்து முடிக்கிறார் பாக்கியா. சாப்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறார் ராஜசேகர்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களை  கொடுத்து கொண்டிருக்கிறார் பாக்கியா மற்றும் அமிர்தா. இந்நிலையில் இன்று அவர்களில் இருவர் எங்களால் சமைக்க முடியாது வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி கிளம்பி செல்கின்றனர்.

மேலும் ஒருவர் தன்னுடைய சொந்தக்காரர் ஒருவர் இறந்துவிட்டதால் நான் ஊருக்கு போக இருப்பதாக கூறி கொடுத்த மளிகை சாமான்களை  திருப்பி கொடுக்கிறார். இந்நிலையில் ஈஸ்வரி இது எல்லாம் உனக்கு தேவையா? இப்படி ஒவ்வொரு ஆளா வந்து திரும்ப கொடுத்துட்டு போன கோபி சொன்னது தான் நடக்க போகுது என பாக்கியாவை திட்டுகிறார்.

இதையடுத்து இந்த ஐட்டத்தை தான் செய்வதாக கூறி பாக்கியாவின் மாமனார் பால் பாயசம் தயார் செய்கிறார். இதையடுத்து ஒவ்வொரு வீடாக சென்று சமையல் பற்றி கேட்டு விசாரிக்கிறார். அப்பொழுது ராஜசேகர் போன் செய்து ஆர்டர் பற்றி விசாரித்து உங்க இடத்தை வந்து பார்க்கணும் சொல்ல பயந்தபடி போனை வைத்து விடுகிறார் பாக்கியா.

அதன் பின்னர் சமையல் செய்யும் பெண்கள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து தங்களின் சமையல் தவறுகளை சொல்ல ஈஸ்வரி கைகொட்டி சிரித்து பாக்கியாவை வெறுப்பேற்றுகிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் கோபியிடம் நடந்ததை கேலியும் கிண்டலுமாக சொல்கிறார்.

அப்பொழுது அங்கு வரும் பக்கத்து வீட்டு பெண்ணின் கணவர் பாக்கியாவை கண்டபடி திட்டுகிறார். அதை கேட்டுக்கொண்டே  இருக்கும் கோபி இதுல ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா நான் வந்து நிக்க மாட்டேன் என கோவமாக சொல்லி விட்டு செல்கிறார். இந்நிலையில் அமிர்தா சமையலை முடித்து அதை எடுத்து வருகிறார்.

அதே போல் செல்வி மற்றும் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து தாங்கள் செய்ததை கொண்டு வந்து கொடுக்கின்றனர். இந்நிலையில் ராஜசேகர் மற்றும் அவரின் மனைவி இன்னும் சாப்பாடு வரவில்லை என்ற வருத்தத்தில் போன் மேல போன் செய்து கொண்டு டென்ஷனில் இருக்கின்றனர். இந்நிலையில் பாக்கியா தான் செய்த அனைத்தையும் வண்டியில் ஏற்றி அனுப்ப தயாராகிறார். இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here