பாக்கியலட்சுமி சீரியலின் நடிகர் கோபி இப்படி பட்டவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
sathish

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபிநாத் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் சதீஷ். திரையுலகின் மாடலாக இருந்து வரும் சதீஷின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் சதீஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் பாக்கியலட்சுமிக்கு ஜோடியாக, சிடுமூஞ்சி அப்பாவாக நடித்து வருபவர் தான் நடிகர் சதீஷ். என்னடா சீரியலில் எப்போ பாத்தாலும் சிடு சிடுன்னு இருக்காரே என்று இவரை பார்த்தால் நினைக்க தோன்றும். ஆனால் நிஜத்தில் நடிகர் சதீஷ் ஒரு ஜாலியான டைப்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சினிமா துறையில் மாடலாகவும் சில திரைப்படங்களில் சப்போர்டிங் ரோல்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் சதீஷ். பாக்கியலட்சுமி சீரியலில் திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவாக இருந்தாலும் தன் பழைய காதலியை சந்தித்து, மனைவிக்கு துரோகம் செய்யும் கணவராக யாரும் நடித்திராத ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் சதீஷ்.

ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களுக்கு கொடுத்த கொரோனா அட்வைஸ் – வைரலாகும் பதிவு!!

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சதீஷ் பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்கள் உண்டு. அது என்னவென்றால் சீரியலில் உள்ள கேரக்டருக்கு நேர் எதிரான கேரக்டர் உள்ளவர் தான் சதீஷ். நடிகர் சதீஷின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்தால் அவர் எவ்வளவு நகைச்சுவை குணம் கொண்டவர் என தெரியும்.

இவர் தனது மனைவியுடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய மனைவி பெயர் கீதா விஜயன். சதீஷை போலவே அவரும் ஒரு மலையாள சினிமா நடிகையாம். மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், அவள் என் தாரம் மட்டுமல்ல. என் தாயும் கூட. என் வீட்டு தெய்வம் என மனைவி பற்றி நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார் சதீஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here