எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்னு சொல்ல எனக்கு நீங்க யாரு? எழிலை எடுத்தெறிந்து பேசும் அமிர்தா!!

0

விஜய் டிவியில் மக்களின் ஆதரவை பெற்று வெற்றி சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று, ஆர்டரை வெற்றிகரமாக முடித்த பாக்கியா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். மேலும் எழிலிடம் அமிர்தா வெறும் நண்பராக மட்டும் இருக்கீங்க என கண்டபடி பேசி அவரை வருத்தத்தில் ஆழ்த்துகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் 1000 பேருக்கு சமைக்க வேண்டும் என்ற ஆர்டரை பலவித தடைகளை மீறி சாதிக்கிறார் பாக்கியா. இந்நிலையில் இன்று, சாப்பாடு ஏற்றி வந்த வண்டியில் இருந்து இறங்கிய பாக்கியாவின் மாமனார் ராஜசேகர் பார்த்து வணக்கம் சொல்லி சாப்பாடு வந்து விட்டதாக  கூறுகிறார்.

அதன் பின்னர் வீர நடை போட்டு கம்பெனிக்குள் நுழைகிறார் பாக்கியா. ராஜசேகர் மற்றும் அவரின் மனைவியிடம் பாக்கியா பேசிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார். அப்பொழுது ராஜசேகர் என்னோட கம்பெனி ஊழியர்கள் எல்லோருக்கும் உணவு பிடித்திருந்தால் மட்டுமே பணம் தருவதாக கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ந்த பாக்கியா மற்றும் உடன் இருப்பவர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அவர்களை சமாளித்து வேலையை பார்க்க சொல்கிறார் பாக்கியா. இதையடுத்து அனைவருக்கும் பயத்துடனே உணவு பரிமாற ஆரம்பிக்கின்றனர் பாக்கியா,செல்வி மற்றும் அமிர்தா.

மேலும் ஒவ்வொரு வாயாக வைக்கும் போது ராஜசேகர் மற்றும் மனைவியின் முகத்தை  பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ராஜசேகர் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு இன்னும் கொஞ்சம் வைங்க என கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். இதனால் மூவரும் மிகுந்த சந்தோஷத்தில்  இருக்கின்றனர்.

அமிர்தா தனது வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது வீடு முழுக்க சிரிப்பு சத்தம்  நிறைந்திருக்கிறது. இந்நிலையில் குழப்பத்துடன் உள்ளே வரும் அமிர்தா அங்கு நடப்பதை பார்த்து குழப்பத்திலேயே இருக்க அப்பொழுது அங்கிருந்து கிளம்பும் எழிலிடம் நீங்க இல்லனா இந்த வீட்டுல எதுவும் இல்லன்னு நினைக்க வேணாம்.

எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் சொல்ல நீங்க யாரு என கேட்கிறார். இதை கேட்ட எழில் மிகுந்த வருத்தத்துடன் அங்கிருந்து செல்கிறார். இந்நிலையில் ராஜசேகர் பாக்கியாவுக்கு பணத்தை செட்டில் செய்ய  சொல்கிறார். மேலும் 3 லட்சம் உங்களுக்கு தர சொன்னதாக ஆபீஸ் மேனேஜர் சொல்ல அதை கேட்டு சந்தோஷத்தில் இருக்கின்றனர் செல்வி மற்றும் பாக்கியா.

அதன் பிறகு வீட்டில் பாக்கியா எழிலிடம் சந்தோஷமாக தான் செய்ததை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். மேலும் தனக்காக வேலை செய்த அனைவருக்கும் நாளை பணத்தை செட்டில் செய்து விடலாம் என கூறிக்கொண்டே அமிர்தாவுக்கு போன் செய்து பேசுகிறார்.

இறுதியில் எழிலிடம் தருவதாக கூறி போனை கொடுக்க அப்பொழுது அமிர்தா போன் பேசாமல் துணி துவைக்கும் கல்லின் மீது வைத்து விட்டு செல்கிறார். இந்நிலையில் வருத்தத்துடன் போன் பார்த்தபடி இருக்கிறார் எழில். இத்துடன் கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here