ஹீரோயின் லுக்கில் பட்டைய கிளப்பும் குழந்தை நட்சத்திரம்.., ட்ரெண்டாகும் கலக்கல் புகைப்படம்!!

0

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் யுவினா பார்த்தவி. முதன் முதலில் உறவுக்கு கை கொடுப்போம் என்ற தொடரின் மூலம் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டார். அதன் பிறகு மதகஜ ராஜா என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. இதனால் முதல் படமாக ‘இவன் வேற மாதிரி’ அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் மாஸ், வீரம், மஞ்சப்பை, அதிதி, அரண்மனை 2, என அடுத்தடுத்து படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பட்டைய கிளப்பி தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் குழந்தையாக இருந்த யுவினா பார்த்தவி தற்போது ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படத்தில் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் குட்டி நயன் அனிகா. இவர் தற்போது மாடலிங் செய்து புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருவது வழக்கமாக வைத்துள்ளார். அவரை ஓரம் கட்டும் விதமாக குழந்தை செம்ம ஸ்டைலிஷாக யுவினா பார்த்தவி செய்த மாடல் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here