ரோஹித்தின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்கள்.., ஒரு போட்டியில் இப்படி ஒரு முன்னேற்றமா??

0
ரோஹித்தின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்கள்.., ஒரு போட்டியில் இப்படி ஒரு முன்னேற்றமா??
ரோஹித்தின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்கள்.., ஒரு போட்டியில் இப்படி ஒரு முன்னேற்றமா??

 பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளனர்.

ரோஹித் சர்மா VS ஷிகர் தவான்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம்(110) மற்றும் முகமது ரிஸ்வான்(88) ஜோடி ஆட்டமிழக்காமல் 203 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் உலக சாதனையும் படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றனர். மேலும் இவர்கள் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ரோஹித் மற்றும் தவானின் சாதனையை முறியடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது ரோஹித் மற்றும் ஷிகர் தவான் இருவருமே இந்திய அணிக்காக பல போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிக ரன்கள் குவித்துள்ளனர். இதன் மூலம் சிறந்த பார்ட்னர்ஷிப்பில் இந்த ஜோடி தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர், இந்த இந்திய ஜோடியை பின்னுக்கு தள்ளி உள்ளனர். அதன்படி சிறந்த பார்ட்னர்ஷிப்பில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்களை பார்க்கலாம்.

RRR-க்கு பிறகு வேறு விதமாக களத்தில் இறங்கும் ராஜமௌலி.., வெளிவந்த புதிய அப்டேட்!!

  • பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) – 1929 ரன்கள்
  • ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் (இந்தியா) – 1743 ரன்கள்
  • கெவின் ஓ பிரையன் மற்றும் பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து) – 1720 ரன்கள்
  • கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா (இந்தியா) – 1660 ரன்கள்
  • கைல் கோட்சர் மற்றும் ஜார்ஜ் முன்சி (ஸ்காட்லாந்து) – 1577 ரன்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here