வருங்கால பிரதமர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தானா?? இந்திய வீரர் பதிவால் குழப்பிய ரசிகர்கள்!!

0
வருங்கால பிரதமர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தானா?? இந்திய வீரர் பதிவால் குழப்பிய ரசிகர்கள்!!
வருங்கால பிரதமர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தானா?? இந்திய வீரர் பதிவால் குழப்பிய ரசிகர்கள்!!

டி20 உலகக் கோப்பைக்கான பட்டத்தை பாகிஸ்தான் அணி வென்றால், பாபர் அசாம் வருங்காலத்தில் பிரதமராக திகழ்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டியில் நுழைவதற்கு பாகிஸ்தான் அணியானது, பல விமர்சனங்களுக்கு தாண்டி தான் வந்துள்ளது. அதாவது, பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் இல்லாமல், பயிற்சி ஆட்டத்தில் கூட தோல்வியை சந்தித்தது.

ஐசிசி அறிவித்த முக்கிய அப்டேட்…, மீண்டும் தலைவராக கிரெக் பார்க்லே தேர்வா??

இதனால், ஆஸ்திரேலிய களம் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையவில்லை என்ற விமர்சனங்கள் முன்பு வந்திருந்தன. இதில், குறிப்பாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பார்ம் மற்றும் கேப்டன்சி குறித்து பல முன்னாள் வீரர்களும் குற்றம் சாட்டியிருந்தனர். இதன் விளைவால், பாகிஸ்தான் அணியானது, அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டி வரை முன்னேறி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், பாபர் அசாம் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அரைசதம் கடந்து தனது பார்மையும் மீட்க முயற்சித்துள்ளார். இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நடப்பு உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றால், 2048 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக பாபர் அசாம் வருவார் என கூறியுள்ளார். இவரது இந்த கருத்து நெட்டிசன்களுக்கு பேசு பொருளாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here