மயூவை ராஜேஷிடம் இருந்து காப்பற்ற ஸ்கூலில் சண்டை போடும் கோபி – இனியாவை அழைத்து செல்ல வரும் பாக்கியா!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராஜேஷ் மயூவை அழைத்து செல்ல வர அதனை பார்த்த கோபி போலீசை அழைத்து வந்து காப்பாற்றுகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் இனியாவை அழைத்து செல்ல கோபி ஸ்கூலுக்கு வருகிறார். அந்த சமயத்தில் ராஜேஷ் மயூவை அழைத்து செல்ல வருகிறார். மயூவும் அப்பொழுது வர வா நம் ஊருக்கு சென்று விடலாம் என்று அழைக்கிறார். தான் வர மாட்டேன் என்று அழுகிறார் மயூ.

baakiyalakshmi

ஆனால் ராஜேஷ் விடாமல் கையை பிடித்து இழுத்து செல்கிறார். அப்பொழுது மயூ கத்த ஆரம்பிக்க யாரும் வரவில்லை. அப்பொழுது கோபியை பார்த்த மயூ அவரை உதவிக்கு அழைக்கிறார். கோபி ராஜேஷிடம் வந்து சண்டை போடுகிறார். இவர்களின் சண்டையில் அனைவருமே வந்து விட பெரிய பிரச்சனை ஆகிறது.

பள்ளி சார்பில் இருந்து போலீசிற்கு கால் செய்கின்றனர். மேலும் கோபி அவருக்கு தெரிந்த இன்ஸ்பெக்டருக்கு கால் செய்கின்றார். அடுத்ததாக இனியா தன் அப்பாவிற்காக காத்து கொண்டுள்ளார். பக்கத்தில் இருப்பவரிடம் போன் வாங்கி கால் செய்ய பாக்கியா பதறுகிறார்.

இனியா தனியாக இருப்பாரே என்று கோபிக்கு கால் செய்கிறார். ஆனால் சண்டையில் போனை கட் செய்கிறார். பாக்கியாவே இனியாவை அழைக்க கிளம்புகிறார். இந்நிலையில் தான் ராதிகா பதறி அடித்து ஓடி வருகிறார்.

போலீசிடம் இவர் கடனை வாங்கி வைத்து விட்டு வீட்டை விட்டு ஓடி விட்டதாகவும், இப்பொழுது என்னை மிரட்டுவதற்காக இங்கே குழந்தையை அழைத்து செல்கிறார் என்றும் சொல்கிறார்.

அப்பொழுது பாக்கியாவும் அங்கு வர எதோ பிரச்சனை நடக்கிறது என்று பார்க்கின்றனர். இனியாவும் அங்கு வந்து விட என்ன பிரச்சனை என்று கேட்கின்றனர். அப்பொழுது எதோ குழந்தையை கடத்திய பிரச்சனை என்று சொல்கின்றனர்.

இதனால் பாக்கியா பதறுகிறார். மேலும் கோபி, ராஜேஷ் பற்றி போலீசிடம் எடுத்து சொல்ல போலீசார் அவரை கைது செய்கின்றனர். அப்பொழுது தான் ராதிகா நிம்மதியடைகிறார். மேலும் கோபி ராதிகாவுக்கு ஆறுதல் சொல்கிறார்.

அப்பொழுது ஹெட் மாஸ்டரிடம் சென்று பேசலாம் என்று திரும்ப அங்கு பாக்கியா, இனியா மற்றும் ஜெனி இருப்பதை பார்த்து ஷாக்காகின்றனர். கோபி ராதிகாவிடம் என்னென்னவோ சொல்லி சமாளிக்கிறார். அங்கிருந்து வேகமாக அழைத்தும் செல்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here