நீ அண்ணன் மாதிரியாடா நடந்துக்குற?? இவன் மேல எப்படி பாசம் வரும்?? குமுறும் பாக்கியலட்சுமி பிரபலங்கள்!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் இனியா மற்றும் எழில் சேர்ந்து புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி எழில், இனியா

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தில் நடக்கும் எதிர்த்த கதையை முன்னிறுத்தி கூறப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடிக்கும் எழில், இனியா, பாக்கியா, ஜெனி, கோபி என அனைவரும் ரசிகர்களுக்கு பிடித்த கதாபாத்திரமாக மாறினர்.

அதுவும் கோபியால் தான் சீரியலில் இந்த அளவிற்கு விறுவிறுப்பு. கடைசியில் கோபி எழிலிடம் இரண்டாவது முறையாக மாட்டி கொண்டார். அது தன்னுடைய நண்பனின் மனைவி என்று ஏதேதோ சொல்லி சமாளிக்க எழில் இதனை சுத்தமாக நம்புவதாக இல்லை.

தன் கணவர் தான் உலகமே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவின் நிலையை பற்றி மிகவும் வருத்தமடைகிறார் எழில். தன் அம்மாவிற்காக இவ்வளவு தூரம் யோசிப்பதால் தான் எழில் கதாபாத்திரம் அனைவர்க்கும் பிடித்து போனது. மேலும் இவர் செய்யும் ரீல்ஸ் போட்டோஷூட் என அனைத்தும் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த சீரியலில் அவருக்கு தங்கையாக நடிக்கும் நேகாவுடன் செய்யும் ரீல்ஸ் தான் அதிக வைரலாகும். நிஜத்திலும் இவர்களுக்குள் இவ்வளவு ஒற்றுமை, பாசமா?? என்று வியக்கும் அளவிற்கு இவர்களின் பாசத்தை காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போதும் இவர்கள் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here