ராதிகாவை வச்சு செய்யும் செல்வி.., போதையில் பாக்கியாவை சுடிதாரில் பார்த்து மிரண்டுபோன கோபி!!!

0
ராதிகாவை வச்சு செய்யும் செல்வி.., போதையில் பாக்கியாவை சுடிதாரில் பார்த்து மிரண்டுபோன கோபி!!!
ராதிகாவை வச்சு செய்யும் செல்வி.., போதையில் பாக்கியாவை சுடிதாரில் பார்த்து மிரண்டுபோன கோபி!!!

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கேண்டினில் செல்வி ராதிகா எப்போது வந்து பிரச்சனை செய்வார் என எதிர்பார்க்க பாக்கியா போய் வேலைய பாரு என சொல்ல ராதிகா வருகிறார். வழக்கம் போல் பாக்கியாவை குறை சொல்ல ஏதாவது தப்பு இருக்குமா என கேண்டினை சுத்தி பார்க்கிறார். ஆனால் எதுவும் இல்லாததால் உங்க சாப்பாடு நல்லாவே இல்லனு குத்தம் சொல்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

 

உடனே பாக்கியா அதுக்கு வாய்ப்பே இல்லை என அடித்து கூறுகிறார் உடனே தான் ரிவியூக்காக வைத்துக் கொண்டிருந்த நோட்டை எடுத்துக் காட்டுகிறார். இதை பார்த்து ராதிகா வாயடைத்து போகிறார். அப்போது செல்வி காபி வேண்டுமா என கேட்டு ராதிகாவை கிண்டலடிக்கிறார். இன்னொரு பக்கம் கோபி டார்ச்சர் தாங்க முடியாமல் குடித்துவிட்டு தன் நண்பனிடம் புலம்புகிறார்.

ஜீவாவை மட்டம் தட்டி பேசிய ஜனார்த்தனன்.., மீண்டும் தன் குடும்பத்துடன் இணைவாரா?? அனல் பறக்கும் கதைக்களம்!!!

 

அடுத்த காட்சியில் பாக்கியா கிளாசுக்கு போக அங்கு பழனிசாமியிடம் வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட அவரும் ஆறுதல் கூறுகிறார். மற்றொரு பக்கம் ஜெனியும் எழியனும் பேசிக்கொண்டிருக்க அப்போது கோபி குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். குடிபோதையில் ஜெனி, எழிலிடம் பேசுகிறார். அந்த நேரத்தில் பாக்கியா சுடிதாரில் வர கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here