பாக்கியா மேல நான் உயிரையே வச்சு இருக்கேன்..,என் உலகமே நீ தான்.., கோபியின் நடிப்பை பார்த்து கோவத்தில் கொதிக்கும் அப்பா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி வசமாக சிக்கிக்கொள்ள அதிலிருந்து தப்பிக்க ஏதேதோ செய்துகொண்டுள்ளார். இதனால் அவரின் அப்பாவிற்கு மிகவும் கடுப்பாகிறது.

பாக்கியலட்சுமி

கோபி நீண்ட காலமாகவே ராதிகாவுடன் தொடர்பில் இருப்பதை கண்டுபிடிக்கிறார் அவரின் அப்பா. பாக்கியாவை நான் பார்த்து தான் உனக்கு கல்யாணம் செய்து வைத்தேன். அவளுக்கும் குழந்தைக்கும் எதாவது துரோகம் பண்ண நெனச்சா அவ்வளவு தான் என்று கத்தி விட்டு செல்கிறார். மேலும் கோபியின் அப்பா ராதிகா வீட்டிற்கு சென்று ஒவ்வொன்றாக அனைத்தையும் விசாரிக்கிறார்.

அப்பொழுது தான் கோபி காதலித்த ராதிகா இவர் தான் என்ற உண்மை தெரிகிறது. ராதிகாவிடம் எதுவும் சொல்ல முடியாமல் திரும்பி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் கோபி ராதிகாவிற்கு கால் செய்து கண்டபடி உளறுகிறார். ராதிகாவும் கோபியின் அப்பா வந்து சென்றது, கேள்வி கேட்டது என அனைத்தையும் சொல்லி விடுகிறார். இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார் கோபி.

அப்பா முன்பே வேண்டும் என்றே பாக்கியா மீது அதிக பாசம் இருப்பது போன்று காட்டிக்கொள்கிறார். மளிகை சாமான்களை வாங்க பாக்கியா செல்ல அப்பொழுது கோபி தான் ட்ராப் செய்வதாக சொல்கிறார். இதனால் கோவமடையும் கோபியின் அப்பா எப்படி நடிக்கிறான் என்று நினைத்து கொள்கிறார். அதன் பிறகு பாக்கியாவிடம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், உன் மேல உயிரையே வச்சு இருக்கேன் என்று சொல்கிறார். என்ன பத்தி எதாவது யாரும் தப்பா சொன்ன நம்பாதே என்று சொல்கிறார். இது பாக்கியாவிற்கு மிகவும் குழப்பமாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here