உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்பு… உங்க அப்பாக்கு வாக்கு கொடுத்திருக்கேன்., – ராமமூர்த்தி வார்த்தையால் குழம்பும் பாக்கியா!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அப்பா ராமமூர்த்தியின் நடவடிக்கை அனைத்திலும் சந்தேகம் வர இதனால் பாக்கியா நேரடியாகவே கேட்டு விடுகிறார்.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ராமமூர்த்தி பாக்கியாவின் வாழ்க்கைக்காக போராடி வருகிறார். ஒரு பக்கம் ராதிகா கோபியின் திருட்டுத்தனம் தெரியாமல் தன் அம்மாவிடம் சண்டை போட்டு வருகிறார். இதனிடையே கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு ஊரில் சில வேலைகள் இருப்பதாக சொல்லி செல்கிறார்.

அப்பொழுது பாக்கியா உங்களுக்கு எதுவும் பிரச்சனையா மாமா?? கொஞ்ச நாளா நீங்க சரியே இல்லை. நீங்க எதுவும் என்கிட்ட இருந்து மறைக்கிறீங்களா?? என்று கேட்க அப்படியெல்லாம் எதுவும் இல்லை. உனக்கு எதுவுமே நடக்க நான் விட மாட்டேன்.

உன்ன கோபிக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போது உங்க அப்பா கிட்ட உன் வாழ்க்கைக்கு நான் பொறுப்புன்னு சொல்லி சத்யம் பண்ணி இருக்கேன் என்று சொல்கிறார். எதுவுமே புரியாமல் பார்க்கிறார் பாக்கியா. இது ஈஸ்வரிக்கு எதோ தவறாக படுகிறது.

அடுத்ததாக செழியன் ஜெனியை நினைத்து அழுதுகொண்டுள்ளார். ஜெனிக்கு கால் செய்ய அதனை ஜெனி எடுக்கவே இல்லை. அப்பொழுது அங்கே பாக்கியா வர உனக்கு உன் வேலை தானே முக்கியம் என்று சொல்கிறார். ஜெனி இங்கே இருந்தபோது அவளிடம் பேச 10 நிமிடம் கூட ஒதுக்கியது கிடையாது, எப்போ பாரு வேலைன்னு தானே இருந்த என்று சொல்கிறார்.

உலக நாயகனின் அடுத்த படத்தில் இணையும் பா.ரஞ்சித் – வெளியானது மாஸ் அப்டேட்!!

நான் பண்ணது தப்பு தான் என்று சொல்லி அழுகிறார். அப்பொழுது பாக்கியா ஜெனிக்கு கால் செய்ய அவர் எடுத்து பேசுகிறார். ஜெனி செழியன் நல்லா இருக்கானா?? என்று கேட்க அதனை கேட்ட செழியன் மெளனமாக கதறுகிறார். அடுத்ததாக திருமண நிகழ்ச்சிக்கு போக சொல்லி ஈஸ்வரி கோபியை பாக்கியாவுடன் போக சொல்கிறார். கடைசியில் கோபி ஒத்துக்கொள்கிறார். அந்த பக்கம் ராதிகா மயூவை ஸ்கூலுக்கு அனுப்பி விட்டு கோபி செல்லும் அதே நிகழ்ச்சிக்கு செல்ல தயாராகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here