
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்தாலும் எப்படியாவது ஒரு வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் பழனிச்சாமி கவர்மெண்ட் சமையல் காண்ட்ராக்ட் எடுக்க ஐடியா கொடுக்கிறார். இதற்காக பாக்கியா 10,000 கொடுத்து அப்ளிகேஷன் போட்ட நிலையில் அதற்கு முன் பணமாக ஒரு லட்சம் கட்ட சொல்கின்றனர். இதை பாக்கியா வீட்டில் வந்து சொல்ல உடனே ஈஸ்வரி, கோபி எல்லாம் வேண்டாம் என்கின்றனர். ஆனால் பாக்கியா, எழில், ராமமூர்த்தி உதவியுடன் இந்த சமையல் கான்ட்ராக்ட்டை எப்படியாவது வாங்க வேண்டும் என நினைக்கிறார்.

இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் பாக்கியா எப்படியோ ஒரு லட்சம் பணத்தை ரெடி செய்து விடுவாராம். அதை காண்ட்ராக்ட் காரர்களிடம் கொடுத்து சமையல் ஆர்டர் வேணும் என்று கேட்பாராம். உடனே அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு குலுக்கல் முறையில் யாருக்கு விழுகிறதோ அவர்களுக்குத்தான் காண்ட்ராக்ட் என்று சொல்லிவிடுவார்களாம். இதைக் கேட்ட பாக்கியா சுக்கு நூறாக உடைந்து போவாராம். மேலும் இதை வீட்டில் வந்து சொல்ல ஈஸ்வரி அப்போ அந்த ஒரு லட்சமும் போச்சா. இருக்குற கடன் பத்தாதுன்னு இதுல இது வேறயா என்று பாக்யாவை சத்தம் போடுவாராம். மேலும் ஒரு வேலை இந்த ஆர்டர் உனக்கு கிடைக்கலைன்னா நீ வீட்டை விட்டு வெளியே போகணும் என்று ஈஸ்வரி எச்சரிப்பாராம்.