
பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் விஷயம் தெரிந்து மொத்த குடும்பமும் ஆடிப் போய் உள்ளனர். மேலும் இதற்கெல்லாம் பாக்கியா தான் காரணம் என குடும்பத்தில் உள்ள அனைவரும் அவர் மீது பழியை சுமத்துகின்றனர். இதனால் பாக்கியா எழில் விஷயத்தையும் மறைத்தாள் தேவையற்ற பிரச்சனை வரும் என பயந்து அவரிடம் உண்மையை சொல்லிவிடலாம் என முடிவு எடுக்கிறார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது பாக்கியா எழிலை தனியாக அழைத்து கணேஷ் பற்றி அனைத்து உண்மையையும் சொல்லிவிடுவாராம். இதை கேட்டு எழில் அதிர்ச்சியாவாரம். மேலும் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் எழில் தவிக்க பாக்கியா அமிர்தாவை கூப்பிட்டு பேசலாம் என்பாராம். பின் இருவரும் அமிர்தாவிடம் விஷயத்தை சொல்லி உன்னோட முடிவு என்ன என்று கேட்பார்களாம். உடனே அமிர்தா யோசிச்சு நான் எழிலுடன் தான் வாழ போகிறேன் என்று சொல்வாராம். இதைக் கேட்டு பாக்கியா சந்தோஷப்படுவாராம். இந்த விஷயம் கணேஷுக்கு தெரியவர அவர் அதிர்ச்சியில் உறைந்து போவாராம்.
தமிழக சுற்றுலா பயணிகளே., ஊட்டி மலை ரயில் சேவை இந்த தேதி வரை நிறுத்தம்., அதிர்ச்சி அறிவிப்பு!!!