
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அடுத்து இதில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது எழில் மற்றும் அமிர்தாவுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்த நிலையில் தற்போது தான் சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இப்படி இருக்கையில் உயிரிழந்ததாக அனைவரும் நினைத்து வந்த அமிர்தாவின் முதல் கணவர் கணேஷ் தற்போது உயிருடன் வந்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் தன் மனைவி மகளை பற்றி தன் பெற்றோரிடம் கேட்கிறார். ஆனால் அவர்களால் நடந்த உண்மையை சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வரும் எபிசோடுகளில் உண்மை தெரிந்து பாக்கியா வீட்டுக்கு கணேஷ் வருகிறார். மேலும் நான் உயிரோடு இருக்கும் பொழுது என்னுடைய மனைவி மகள் எதற்காக இங்கு இருக்க வேண்டும் என கேட்டு சண்டை போடுவாராம். இதையடுத்து இதற்கு என்ன சொல்வது என தெரியாமல் குடும்பத்தினர் அதிர்ச்சியில் நிற்பார்களாம்.
குற்றங்களை குறைக்க அரசு எடுத்த அதிரடி முடிவு.., வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த கட்டாயம்!!