மீண்டும் மீண்டும் பாக்கியா முன்பு அசிங்கப்படும் கோபி.., ஈஸ்வரி செய்த தரமான சம்பவம்!!!

0
மீண்டும் மீண்டும் பாக்கியா முன்பு அசிங்கப்படும் கோபி.., ஈஸ்வரி செய்த தரமான சம்பவம்!!!
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா எழிலிடம் ஹோட்டல் பிசினஸ் சரியாகவே போகவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார். இதை மறைந்து நின்று கேட்கும் கோபி பாக்கியாவிடம் உனக்கு சமையல் மட்டும் தெரிஞ்சா போதாது. பிசினஸ் எப்படி சரியா கொண்டு போகணும் என்பது பற்றி தெரிந்திருக்க வேண்டும் என நக்கலாக பேசுகிறார். அந்த நேரத்தில் எழில் ஆத்திரப்பட பாக்கியா அவரை சமாதானப்படுத்தி ஒருநாள் அவர் ஹோட்டலில் வேலை பார்க்கும் செஃப் வரவில்லை என்றால் அப்போது அவருக்கு அருமை தெரியும் என்று என்று சொல்கிறார்.
இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியா சொன்னது போலவே கோபியின் ஹோட்டலில் வேலை பார்க்கும் செஃப் லீவு போடுகிறார். இதனால் கோபி சமையலுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து உதவி கேட்கிறார். ஆனால் ஈஸ்வரி பாக்கியாவின் ஹோட்டலில் இருந்து சமையல்களை செய்து கொண்டு வரச் சொல்கிறார். பின் அங்கு வரும் பாக்கியா வழக்கம் போல் கோபி செய்தது தவறு என்று அவருக்கு புரிய வைக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here