நீயும் பெட்டியோட வந்துட்டியா? ராதிகாவின் அம்மாவை கிழித்து தொங்கவிட்ட ஈஸ்வரி.., மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி !!!

0
நீயும் பெட்டியோட வந்துட்டியா? ராதிகாவின் அம்மாவை கிழித்து தொங்கவிட்ட ஈஸ்வரி.., மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி !!!
நீயும் பெட்டியோட வந்துட்டியா? ராதிகாவின் அம்மாவை கிழித்து தொங்கவிட்ட ஈஸ்வரி.., மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி !!!

பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் எல்லோரிடமும் இங்கிலீஷ் கிளாஸில் நடந்தது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா இங்கிலீஷ் பேசுவதை பார்த்து அனைவரும் கிண்டலடிக்கின்றனர். எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து கோபி நானும் உங்க கூட சேர்ந்துக்கவா என்று கேட்டு விட்டு எழில் பக்கத்தில் உட்காருகிறார். அப்போது கோபி எதுக்காக சிரிக்கிறீங்க என்று கேட்க இனியா விஷயத்தை சொல்கிறார். உடனே கோபி ஸ்போக்கன் இங்கிலீஷ் எல்லாம் வயதாவதற்கு பிறகு படித்தால் சரியாக பேச முடியாது என்று சொல்ல, பாக்யா கெட்டதே நாள் கழித்து கத்துக்க முடியுதுன்னா நல்லது எப்ப வேணாலும் கத்துக்கலாம் என பதிலடி கொடுக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கோபி புரியாமல் முழிக்க நீங்க குடிக்கிறதை பற்றி தான் சொல்றாங்க என்று சொல்லி நக்கலடிக்கிறார். அந்த நேரத்தில் எழில் கோபியிடம் ராதிகா என்று சொல்ல அவர் பதறியடித்துக் கொண்டு நான் காபி குடிக்கல நான் காபி குடிக்கல என்று புலம்ப அனைவரும் சிரிக்கின்றனர். அடுத்ததாக ராதிகாவின் அம்மா பாக்கியா வீட்டுக்கு வந்து ராதிகா, ராதிகா என்று கூப்பிட ஈஸ்வரி நீ எதுக்கு இங்க வந்த என சத்தம் போடுகிறார். மேலும் நீயும் இங்க பெட்டியோட வந்துட்டியா? இங்க எல்லாரும் தங்குறதுக்கு சத்திரமா என்று ஈஸ்வரி திட்டுகிறார். உடனே ராதிகாவின் அம்மா நா இங்க தங்க வரல, மயூ தான் இங்க இருக்க போற என சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

சர்வதேச அணியில் இடம் பிடித்த CSKவின் குட்டி மலிங்கா…, ஒருநாள் போட்டியில் களமிறங்க திட்டம்!!

பிறகு ராதிகாவின் அம்மாவுக்கும், ஈஸ்வரிக்கும் வாக்குவாதம் நடக்க ராதிகா அவரை அழைத்து கொண்டு மாடிக்கு செல்கிறார். அடுத்ததாக ராமமூர்த்தியும், ஈஸ்வரியும் கோபியை திட்டுகின்றனர். பின் ரூமில் ராதிகா அம்மாவை திட்டுகிறார். நீ என்னதான் நினைச்சுகிட்டு இருக்க என்று மயூவை எதுக்கு கூட்டிட்டு வந்தா என்று திட்டுகிறார். பிறகு கோபி வர ராதிகா அம்மா அங்கிருந்து கிளம்புகிறார். பின் கோபியிடம் ராதிகா சண்டை போட பதிலுக்கு அவர் எல்லாரும் ஏன் மேல தான் பார்த்த திணிக்கிறீங்க என்று சொல்லி பதிலுக்கு சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here