
பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் பாக்கியா ராதிகாவிடம் பார்க்க வர சொன்னீங்களே என்று கேட்க, அதற்கு அவர் வெயிட் பண்ணுங்க இதோ வரேன் என்று சொல்ல, பின் உள்ளே கூப்பிடுகிறார். அடுத்ததாக பாக்கியாவிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டு அவரை வேலை செய்ய விடாமல் வெட்டி கதையை பேசிக்கொண்டிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பின் ராதிகா கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கு பாக்கியா நக்கலாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். ஒரு கட்டத்தில் ராதிகாவின் டார்ச்சலை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆபிஸ் மேனேஜரிடம் கம்பளைண்ட் செய்கிறார். அதற்கு அந்த மேனேஜர் உடனே ராதிகாவுக்கு போன் பண்ணி வர சொல்லி அவருக்கு வார்னிங் கொடுக்கிறார். இதனால் கடுப்பான ராதிகா பாக்கியாவிடம் சண்டை போட அதுக்கும் அவர் பதிலடி கொடுக்கிறார். பின் இங்கிலிஷ் கிளாசுக்கு வரும் பாக்கியா அங்கு அனைவரிடமும் ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்.
பின் அனைவரும் இங்கிலீஷ் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக வீட்டிற்கு வரும் பாக்கியா அமைதியாக இருக்க எழில் என்ன ஆச்சு என கேட்கிறார். முதலில் சொல்ல மறுக்கும் பாக்கியா பின் ஆபிசில் ராதிகா செய்ததை சொல்ல இதை கேட்டு ஈஸ்வரி இன்னைக்கு அவ வரட்டும் இருக்கு என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.