
பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடில் கோபி, இனியாவை பார்க்க ஸ்கூலுக்கு வந்ததற்காக அவரிடம் சண்டை போடுகிறார். அடுத்ததாக பாக்கியா கேண்டினில் காபி கொண்டு வரும் போது ராதிகா மோதி கீழே கொட்டி விடுகிறது. இதற்காக ராதிகா அவரிடம் சண்டை போட்டு கோபியை என்னிடம் இருந்து பிரிக்க பாக்குறீங்களா என கேட்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பதிலுக்கு பாக்கியா நீங்க நல்லா கதை எழுதுறீங்க. பேசாம அதுக்கு ட்ரை பண்ணுங்க என்று சொல்கிறார். இப்படியே இருவருக்கும் இடையில் விவாதம் நடக்க ஒரு கட்டத்தில் பாக்கியா கோபி போனதுக்கு அப்புறம் தான் நா நிம்மதியா இருக்கேன் என்று சொல்கிறார். பின் அவருக்கு அட்வைஸ் செய்கிறார். பின் வீட்டுக்கு வரும் கோபி இனியா படித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவரை பாராட்டுகிறார்.
இளம் வயதில் காதலியுடன் விஷ்ணு விஷால் இப்படி தான் இருந்தாரா?? ஆச்சரியமூட்டும் புகைப்படம்!!
அப்போது நான் பண்ண தப்பு உங்க எல்லார் சந்தோஷத்தையும் கெடுத்துட்டேன் என வருத்தப்படுகிறார்.கோபி பேசுவதை ராதிகா மறைந்திருந்து கேட்க அதை பாக்கியா பார்த்துவிடுகிறார். அடுத்ததாக பாக்கியா துக்கத்தில் இங்கிலீஷ் பேசிக்கொண்டிருக்க இனியா என்ன என்று கேட்க, பின் அவரும் சொல்லி தருகிறார். பிறகு இனியா பாக்கியாவிடம் கோபியை நினைத்து வருத்தப்பட அவரை பாக்கியா சமாதானப்படுத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.