பாக்கிய லட்சுமி சீரியல் தற்போது ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது இனியாவின் ட்ரிப்புக்கு ஈஸ்வரி மற்றும் செல்வி ஆகியோருடன் பாக்கியாவும் சென்றுள்ளார். மேலும் சூழ்நிலை காரணமாக பாக்கியா காரை ஓட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்படி இருக்கையில் இவர்கள் வந்த காரை போலீஸ் மறித்து பாக்கியாவிடம் லைசன்ஸ் கேட்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் லைசன்ஸை எடுத்து வராததால் அம்ரிதாவுக்கு கால் செய்து அதை போட்டோ எடுத்து அனுப்பும் படி பாக்கியா கூறுகிறார். இதையறிந்த கோபி லைசன்ஸை எடுத்து மறைத்து வைக்கிறார். மேலும் லைசன்ஸை தேடிவிட்டு கிடைக்கவில்லை என அம்ரிதா பாக்கியாவிடம் கூறுகிறார். இதைக்கேட்டு பாக்கியா இன்னும் அதிர்ச்சியில் உரைக்கிறார்.
இப்படி இருக்கையில் ஹோட்டலுக்கு சென்ற கோபி லைசன்ஸை மறைத்து வைத்ததை குறித்து அவரின் நபரிடம் கூறுகிறார். அந்த நேரத்தில் அங்கு இருந்த பழனிச்சாமி இதை கேட்கிறார். இதனால் இனி வரும் எபிசோடில் தன்னுடைய தோழி பாக்கியாவை பழனிச்சாமி கோபியின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவார் என எதிர்பார்க்க படுகிறது.