தாலிய கட்ட போறியா? இல்ல சாகவா? மிரட்டும் ராதிகா.., கோபியின் மஜா முடிவு – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

0

சீரியலை பொறுத்தவரை கதையை ஜவ்வாக இழுத்தா தான் வண்டி ஓடும். ஆனால் அந்த ஜவ்விலும் ட்விஸ்டுகள், எதிர்பார்ப்புகள் என புது புது ஸ்வாரஸ்யங்கள் கொடுத்தால் தான் பார்வையாளர்களும் நாளுக்கு நாள் அதிகமாகும். அப்படி அதிகமானால் தான் சீரியல்கள் டிஆர்பி -யில் இடம் பெரும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை யாராலயும் அடிச்சிக்கவே முடியாது.

அந்த சீரியல்ல மெயினே கோபி, பாக்கியா மற்றும் ராதிகா தான். இவங்க மூணு பேரை சுத்தியே இந்த பாக்கியலட்சுமி தொடர் அமையும். இப்படி இன்னிக்கு எபிசோடுல ராதிகா கிட்ட மனம் திறந்து பேசிய கோபி எல்லா உண்மையையும் போட்டு உடைத்தார். பேண்ட் , சட்டை மேட்ச் ஆகலனா தூக்கி போட்ருப்பேன். ஆனா எனக்கு வாழ்க்கையே மேட்ச் ஆகல..ஏன் புரிஞ்சிக்க மாட்டிங்குற ராதிகா என உருக்கமா பேசினார்.

இதனால் மனதுருகிய ராதிகா உங்க கூட வாழணும்னு எனக்கு ஆசையாத்தான் இருக்கு அப்டினு சொல்லியிருக்காங்க. இதையும்,இந்த வார ப்ரோமோவையும் வச்சி பாக்குறப்போ இந்த வாரத்துக்குள்ள கோபி, ராதிகா கல்யாணம் நடக்க போகுது. ஏன்னா! இப்போ ஒரு போட்டோ வைரலாகிக்கிட்டு இருக்கு. ராதிகா கைல தாலி இருக்க மாதிரி போட்டோ தான் அது.

ராதிகா கணவர்கொடுக்குற தொந்தரவுல இருந்து தப்பிக்க கோபிகிட்ட போய் தாலியை நீட்டி இப்போவே என்ன கல்யாணம் பணிக்கோன்னு சொல்லி ராதிகா கெஞ்சுவது போலவும் கோபி முழித்து கொண்டிருப்பது போலவும் அந்த போட்டோல இருக்கு. இதெல்லாம் பாக்குறப்போ இதான் சாக்குன்னு கோபியும் ராதிகாவை கல்யாணம் செஞ்சிக்குவாரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here