பாக்யலட்சுமி சீரியல் இப்பொழுது ஒரு கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவும், கோபியும் வீட்டை எதிர்த்து இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் கோபிக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காக ராமமூர்த்தியும் அவர்களுடனேயே தங்கி வருகிறார். பாக்கியாவின் நடவடிக்கை எதுவும் கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வீட்டுக்குள்ளே இருந்தவ இப்ப வெளியே சுத்த ஆரம்பிச்சிட்டா என்று கண்டமேனிக்கு பேசுகிறார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும் வீட்டுக்கு முன்னாள் பாக்கியாவின் பெயரை வைத்ததால் கோபி வீட்டுக்கான மொத்த பணத்தையும் கொடுக்கும்படி சண்டை போட்டு சென்றுள்ளார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் இப்பொழுது புதிய அப்டேட் வந்துள்ளது.
அஜித் படத்தில் நடிக்க மஞ்சு வாரியர் அப்பவே மறுத்தாரா?.., உண்மையான காரணம் இதான்!!
அதாவது ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா சீரியலை விட்டு விலக இருக்கிறாராம். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இப்படி இருக்க அவருக்கு பதில் யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதாவது வனிதாவிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.