கோபி ராதிகாவின் திருமணத்தை அறிந்து கொள்ளும் ராம மூர்த்தி – சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்!!

0

விஜய் டிவியில் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாக்கியலட்சுமி. தற்போது இந்த சீரியலில் ப்ரோமோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியின் வெளியாகி மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடர் ஒரு குடும்ப பெண்ணின் வாழ்க்கை அனுபவத்தை கூறும் கதையாக இருந்து வருகிறது.இந்த சீரியலில் குடும்ப தலைவியாக இருப்பவர் பாக்கியலட்சுமி. இவரது கணவர் கோபி இவரை கொஞ்சம் கூட மதிக்காமல் தனது முன்னாள் காதலியான ராதிகாவுடன் சுற்றி வருகிறார். மேலும் ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று ராதிகாவின் அம்மா பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவில் பாக்கியாவின் வீட்டிற்கு வரும் ராதிகாவின் மகள் மயூவிடம் பேச்சு கொடுக்கும் கோபியின் அப்பா, அவர்களின் திருமணம் குறித்து அறிந்து கொள்கிறார். மேலும் இப்படி இருக்கும் தன் மகனை நினைத்து மனம் நொந்து அழுது கொண்டு இருக்கிறார். இதன் பிறகு அவர் செய்ய போகும் காரியம் என்ன என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here